அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்... BSNL-ல் மட்டுமே...!

புதிய தொடக்கம் என்பதால் மாதம் 777 ரூபாய் மதிப்பிலான 18ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: February 13, 2019, 3:09 PM IST
அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்... BSNL-ல் மட்டுமே...!
பிஎஸ்என்எல்
Web Desk | news18
Updated: February 13, 2019, 3:09 PM IST
999 ரூபாய் மதிப்புக்கான அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சலுகையை BSNL தனது பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.

ஜியோ கிகா ஃபைபர் சேவைக்குப் போட்டியாக BSNL நிறுவனம் தற்போது பாரத் ஃபைபர் சேவையை சில நாள்களுக்கு முன்னர் நாடெங்கிலும் அறிமுகப்படுத்தியது.

ஒரு ஜிபி-க்கு 1.1 ரூபாய் என்ற மதிப்பில் முதற்கட்டமாக 35ஜிபி ப்ராட்பேண்ட் டேட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஆறு மாதங்களுக்கு வரையிலான ப்ராட்பேண்ட் சேவையை BSNL அளிக்கிறது.


புதிய தொடக்கம் என்பதால் மாதம் 777 ரூபாய் மதிப்பிலான 18ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. துவக்க விழாச் சலுகையாக ப்ராட்பேண்ட் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சலுகையை BSNL வழங்குகிறது.

இச்சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் BSNL ப்ராட்பேண்ட் சேவை மூலமாகவோ அல்லது BSNL இணையதளம் மூலமாகவோ பெற முடியும்.

அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் மூலம் ப்ரைம் வீட்யோ மற்றும் ப்ரைம் மியூசிக் ஆகிய சேவைகளை இணைத்தேப் பெற முடியும். அமேசான் உடன் BSNL மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் BSNL ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

Loading...

மேலும் பார்க்க: டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை
First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...