• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆன்லைன் திருட்டில் இருந்து தப்பிப்பது எப்படி? SBI கொடுத்த டிப்ஸ்

ஆன்லைன் திருட்டில் இருந்து தப்பிப்பது எப்படி? SBI கொடுத்த டிப்ஸ்

SBI

SBI

இணையக்கொள்ளை அதிகரித்து வருவதால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுமாறு எஸ்.பி.ஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

  • Share this:
    கொரோனா காலத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பெரிதும் உதவியாக இருந்தது. மக்கள் வீடுகளிலேயே இருந்து தங்களுக்கு தேவையான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிந்து. நெட் பேங்கிங், கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகள் வழியாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டன. இதனை குறிவைத்த சைபர்கிரைம் கொள்ளையர்கள், ஆன்லைன் வழியாக மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்வேர்டுகளை மறைமுகமாக திருடி, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பணத்திருட்டில் ஈடுபட்டனர்.

    அண்மைக்காலமாக ஆன்லைன் திருட்டு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், தவறான செயலிகள் மற்றும் கேம்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைன் கொள்ளையர்கள் மொபைலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழையும் ஆன்லைன் திருடர்கள் நொடிப்பொழுதில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பாஸ்வேர்டுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். அதேபோல், கவர்ச்சிகரமான மெசேஜ் அனுப்பி, அதனுடன் லிங்க் ஒன்றையும் அனுப்புவார்கள். அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றால்,மொபைல் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படும்.

    இந்தியாவிலேயே எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிகளவு நெட்பேங்கிங்கை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வங்கியின் வாடிக்கையாளர்களை குறிவைத்து சைபர்கிரைம் கொள்ளையர்கள் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வங்கி, தங்களது வாடிக்கையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை மெசேஜ் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் வேக்சின் போட்டுக்கொண்டால் வைரஸை எப்படி வீழ்த்த முடியுமோ, அதனைப்போல அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுவதன் மூலம் இணையக் கொள்ளையர்களின் திருட்டு நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என கூறியுள்ளது

    https://twitter.com/TheOfficialSBI/status/1413354727186870272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1413354727186870272%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftech.hindustantimes.com%2Ftech%2Fnews%2Ffraudsters-go-online-to-target-sbi-account-holders-here-is-how-to-stop-them-from-stealing-money-71625855419564.html

    ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் போதுமான முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ் மற்றும் லிங்குகளை ஓபன் செய்ய வேண்டாம் என கூறியுள்ள எஸ்.பி.ஐ வங்கி, அந்த லிங்குகள் தவறான வெப்சைட்டுக்கு அழைத்துச்சென்று ஹேக்கர்களிடம் சிக்க வைக்கும் பொறி என விளக்கம் அளித்துள்ளது.

    தெரியாத அல்லது எந்தவொரு நபர்களிடமும் வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு போன்ற தகவல்களை பகிர வேண்டாம் எனவும் எஸ்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது. ஒருமுறை வங்கிக் கணக்கில் இருந்து பணம் களவாடப்பட்டுவிட்டால், அதனை மீட்பது மிகவும் கடினமானதாக இருப்பதை உணர்ந்து, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அண்மையில், எஸ்.பி.ஐ ஏ.டி.எம்களில் ஹரியான கொள்ளையர்கள் மிகவும் தந்திரமாக செயல்பட்டு லட்சக்கணக்கில் கொள்ளையடித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: