அடுத்த ஆண்டு முதல் சென்னையில் தயாராகிறது ஐபோன்!

ஸ்ரீபெரம்பத்தூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர்.

Web Desk | news18
Updated: December 26, 2018, 2:37 PM IST
அடுத்த ஆண்டு முதல் சென்னையில் தயாராகிறது ஐபோன்!
ஆப்பிள் ஐ போன்
Web Desk | news18
Updated: December 26, 2018, 2:37 PM IST
வரும் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

உலகின் பிரபலமான பல போன் நிறுவனங்களுக்கு ஃபாக்ஸ்கான் உற்பத்தியாளராக உள்ளது. சென்ற ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள பீனியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் ஆண்டு முதல் சென்னையில் ஃபாக்ஸ்கான் உற்பத்தியைச் செய்ய உள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தற்போது 15,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 90 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். ஐபோன் உற்பத்தி தொடங்கும் போது மேலும் புதிதாக ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆட்டோமொபைல் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்ட வந்த நிலையில் சமீபகாலமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திகளும் அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பார்க்க: முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: இளம்பெண் தற்கொலை

First published: December 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...