முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி?

உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி?

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter | நீங்கள் ஒரு தீவிர ட்விட்டர் யூஸர் என்றால், உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை எப்படி டவுன்லோட் செய்து archive செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டரை அதிகாரபூர்வமாக கையகப்படுத்திய எலான் மஸ்க்கின் சமீபத்திய அதிரடி நடவடிக்கைகளில் ஊழியர்களின் திடீர் பணிநீக்கம் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ட்விட்டரை தன் வசப்படுத்தியதை தொடர்ந்து மஸ்க் அவர் விரும்பும் மாற்றங்களை விரைவாகச் செய்ய பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் மஸ்க், மறுபுறம் இவ்வாறு கொடுக்கும் அழுத்தம் காரணமாக ட்விட்டர் நிறுவனம் மிக விரைவில் செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்ள கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ட்விட்டரில் தொடர்ந்து சிக்கலை தரும் பல சிறிய விஷயங்களைத் தீர்க்க போதுமான ஊழியர்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. பல்வேறு குழப்பங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் ட்விட்டர் எதிர்பாராதவிதமாக ஷட்டவுன் ஆகி விட்டால் உங்கள் டிவிட்கள், டைரக்ட் மெசேஜ்கள் மற்றும் பிற தகவல்கள் என அனைத்தும் ரெக்கவரி செய்ய முடியாதபடிக்கு மறைந்து விட கூடும். எனவே பல யூஸர்கள் தங்கள் ட்விட்டர் கன்டென்ட் அனைத்தையும் டவுன்லோட் செய்து தகவல்களை காப்பகப்படுத்தும் (archive) முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் ஒரு தீவிர ட்விட்டர் யூஸர் என்றால், உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை எப்படி டவுன்லோட் செய்து archive செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டவசமாக உங்கள் கடந்த ட்விட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்கள் அனைத்தையும் உள்ளடக்கிய உங்கள் அக்கவுண்டின் முழுமையான Archive-வை டவுன்லோட் செய்து கொள்வதை ட்விட்டர் எளிதாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான மற்றும் எளிதான விஷயம் என்னவென்றால் ட்விட்டருக்கு இது தொடர்பாக ஒரு ரெக்வஸ்ட் அனுப்பினால் போதும். உங்களுக்கு ஒரு ஃபைல் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அதை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

Also Read : வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

உங்கள் ட்விட்டர் Archive-வை டவுன்லோட் செய்வது எப்படி.?

- முதலில் ட்விட்டர் வெப்சைட்டிற்கு சென்று More என்ற ஆப்ஷனிற்கு சென்று Settings and Support-ல் இருக்கும் Settings and privacy-க்கு செல்லவும்.

- Your Account என்பதில் கொடுக்கப்பட்டிருக்கும் Download an archive of your data-வை கிளிக் செய்யவும்.

- இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை என்டர் செய்ய சொல்லியும், இது நீங்கள் தானா என்பதை சரிபார்க்கும் வகையில் Verify it’s you என்பதையும் கேட்கும். இதனை தொடர்ந்து உங்கள் இமெயில் அல்லது மொபைலில் OTP-யை கோரி அதை என்டர் செய்யவும்.

- இப்போது Request archive என்பதை கிளிக் செய்யவும்.

- உங்கள் டேட்டா டவுன்லோட்டிற்கு தயாராக இருக்க 24 மணிநேரம் வரை ஆகலாம் என்று ட்விட்டர் கூறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

- எனவே உங்கள் டேட்டா டவுன்லோட்டாக தயாராகும் வரை காத்திருங்கள்

ட்விட்டர் உங்கள் முழு ட்விட்டர் archive-ன் .zip ஃபைலுடன் உங்களது மெயிலுக்கு ஒரு இ-மெயிலை அனுப்பும். உங்கள் டிவைஸில் நீங்கள் ட்விட்டர் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்திருந்தால், ஃபைல் டவுன்லோடு செய்ய தயாராக உள்ளது என்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஆப்ஸ் சார்ந்த நோட்டிஃபிகேஷனை பெறுவீர்கள்.

மொபைலை பயன்படுத்தி உங்கள் ட்விட்டர் archive-வை டவுன்லோட் செய்வது எப்படி.?

- உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் ஆப்-ஐ ஓபன் செய்து Settings and Privacy-க்கு செல்லுங்கள்.

- பின் அதிலிருக்கும் Your Account ஆப்ஷனுக்கு சென்று Download an archive of your data என்பதை டேப் செய்யுங்கள்.

- ட்விட்டர் இப்போது புதிய பிரவுசர் விண்டோவை ஓபன் செய்யும். அதில் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் sign செய்யவும்.

- இப்போது Request archive-வை டேப் செய்யவும்.

- உங்கள் அக்கவுண்ட்டை சரிபார்த்த பிறகு கோரிக்கை செயலாக்கப்படும். உங்கள் டேட்டா டவுன்லோடிற்கு தயாராக இருக்க 24 மணிநேரம் ஆகலாம் என்ற ட்விட்டரின் மெசேஜை பார்ப்பீர்கள்.

top videos

    - உங்கள் டேட்டாவின் archive டவுன்லோட் செய்ய தயாரானதும் ஆப்ஸ் சார்ந்த நோட்டிஃபிகேஷனை பெறுவீர்கள்.

    First published:

    Tags: Tamil News, Technology, Twitter