உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை எப்போது உருவாக்குனீர்கள் என்பது நினைவில் உள்ளதா? பலருக்கு இது சரியாக நினைவில் இருக்காது என்பதே உண்மை. ஆம், புதிதாக லாகின் செய்யும் போது இன்ஸ்டாகிராமில் உங்கள் இமெயில் ஐடியைக் கேட்கும். அந்த நேரத்தில் மறந்து விட்டாலோ, அல்லது ஒருவேளை சில காரணங்களால் நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தந்த ஐடி செயல்படவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். இதை எளிதாக மாற்றி கொண்டு எப்போதும் போல பயன்படுத்தலாம். இதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
கணினி/லேப்டாப் வழியாக:
நீங்கள் விண்டோஸ், மேக், லினக்ஸ், குரோம்புக் ஆகிய எவற்றில் வேண்டுமானாலும் உங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை திறந்து கொள்ளலாம். அடுத்ததாக உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரவுசரில் லாகின் செய்து கொள்ளவும். பிறகு, உங்கள் அக்கவுண்ட்டில் மேல் வலது மூலையில், புரோப்பைல் ஐகானை கிளிக் செய்யவும். மேலும் அதன் உள்ளே சென்றதும் மீண்டும் புரோபைல் என்பதை கிளிக் செய்யவும்.
புரொபைல் திறந்தவுடன், உங்கள் யூசர் பெயருக்கு பக்கத்தில் “Edit Profile" என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும். இந்த பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்து பார்த்தால், நீங்கள் "Email" என்பதை பார்க்க முடியும். அதைக் கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் புதிய இமெயில் முகவரியை சேர்க்கவும். இறுதியாக "Submit" என்பதை கொடுக்கவும்.
இறுதியாக இன்ஸ்டாகிராமில் இருந்து இமெயில் லிங்க் ஒன்றை பெறுவீர்கள். இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து கொள்ளவும். அடுத்தாக உங்கள் இமெயில் இன்பாக்ஸைத் திறந்து, “Confirm Email Address" என்பதை கிளிக் செய்து இந்த புதிய இமெயிலை இன்ஸ்டாகிராமில் இணைத்து கொள்ளுங்கள்.
Also Read : இன்ஸ்டாகிராம் அப்டேட்: புதிய அம்சம்; விரைவில்!
மொபைலில் மாற்றும் வழி:
உங்கள் மொபைல் மூலம் நீங்கள் இன்ஸ்டாகிராம் இமெயில் முகவரியை மாற்ற விரும்பினால் அதற்கு எளிய வழிமுறை உள்ளது. இதற்கு முதலில் உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து கொள்ளவும். பிறகு அதில் கீழே உள்ள புரொபைல் ஐகானை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அதில் “Edit Profile" என்பதை டேப் செய்து கீழே வரவும். இங்கு “Personal Information Settings" என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
Also Read : இன்ஸ்டாகிராமில் இனி எந்த வீடியோவையும் ரீமிக்ஸ் செய்யலாம் - எப்படித் தெரியுமா?
அங்கே உள்ள இமெயில் முகவரி என்பதை கிளிக் செய்யவும். அதில் “Change Email" என்பதை டேப் செய்து, புதிய இமெயில் முகவரியை தரவும். பிறகு மேலே வலது புற மூலையில் உள்ள டிக் மார்க்கை தரவும். பிறகு உங்களுக்கு “Check Your Email” என்கிற நோட்டிபிகேஷன் பாப்-அப் ஆகும். இதற்கு 'Ok' என்று கொடுக்கவும். பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து இமெயில் லிங்க் ஒன்றை பெறுவீர்கள்.
இதில் வரும் இணைப்பை கிளிக் செய்துஉங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து கொள்ளவும். இறுதியாக உங்கள் இமெயில் இன்பாக்ஸில், “Confirm Email Address" என்பதை கிளிக் செய்து இந்த புதிய இமெயிலை இன்ஸ்டாகிராமில் இணைத்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Instagram, Technology