அமேசானுக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் - சானியா மிர்சா பங்கேற்கும் ஃப்ளிப்கார்ட் சீரிஸ்

ஃப்ளிப்கார்ட் தளத்திலேயேதான் இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அமேசான் ப்ரைம் போல் தனி தளம் ஏதும் கிடையாது.

அமேசானுக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் - சானியா மிர்சா பங்கேற்கும் ஃப்ளிப்கார்ட் சீரிஸ்
பேக்பெஞ்சர்ஸ் நிகழ்ச்சி
  • News18
  • Last Updated: October 16, 2019, 3:50 PM IST
  • Share this:
அமேசானுக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தைத் தொடங்கியுள்ளது.

அமேசான் போல் இல்லாமல் முற்றிலும் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், சீரிஸ்கள், திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடவே முதற்கட்டமாக ஃப்ளிப்கார்ட் செயல்படுத்த உள்ளது. இதன் அடிப்படையில் ஃப்ளிப்கார்ட் வழங்கும் முதல் சீரிஸ் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர், நட இயக்குநர், நடிகை, தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஃபரா கான் ஃப்ளிப்கார்ட் வழங்கும் முதல் சீரிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ‘Backbenchers’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் தொடரில் ஃபரா கான் உடன் நடிகை பரினிதி சோப்ரா மற்றும் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.


தொடர்ந்து பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் ஃப்ளிப்கார்ட்-க்கு ஏற்ற சீரிஸ், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ஒப்பந்தமிட்டுள்ளனர். ஃப்ளிப்கார்ட் தளத்திலேயேதான் இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அமேசான் ப்ரைம் போல் தனி தளம் ஏதும் கிடையாது.

மேலும் பார்க்க: வோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்!

5ஜி குறித்து செயல்விளக்கம் அளித்த ஜியோ - சாம்சங்
First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading