டெலிவரியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் - ஃப்ளிப்கார்ட் அறிவிப்பு

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு அளிக்காத வகையில் மறு சுழற்சி செய்ய முடியும் வகையிலான ப்ளாஸ்டிக் பயன்பாடை ஊக்குவிக்கவும் உள்ளது.

Web Desk | news18
Updated: August 31, 2019, 7:23 PM IST
டெலிவரியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் - ஃப்ளிப்கார்ட் அறிவிப்பு
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: August 31, 2019, 7:23 PM IST
ஒற்றைப் பயன்பாடு மட்டும் கொண்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என ஃப்ளிப்கார்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃப்ளிப்கார்ட் இனி வரும் காலங்களில் ஒற்றைப் பயன்பாடு கொண்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துள்ளது. பேக்கேஜ் மற்றும் டெலிவரி செய்யவும் ஃப்ளாஸ்டிக் பயன்படுத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 2021-ம் ஆண்டுக்குள் 100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யக்கூடிய வகையிலான உள்ள ப்ளாஸ்டிக் மட்டுமே பயன்படுத்துவது என்றும் ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. மேலும் 2019 ஆகஸ்ட் 1-ம் தேதியின் போது ஒற்றைப் பயன்பாடு ப்ளாஸ்டிக்கை 25 சதவிகிதம் அளவு தவிர்த்துவிட்டதாவும் ஃப்ளிப்கார்ட் பெருமை கொண்டுள்ளது.


சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு அளிக்காத வகையில் மறு சுழற்சி செய்ய முடியும் வகையிலான ப்ளாஸ்டிக் பயன்பாடை ஊக்குவிக்கவும் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர், பாலி பவுச், பேப்பர் பேக், பபுள் ரேப்க்குப் பதிலாக பேப்பர் அட்டை என அனைத்து வகையிலும் மாற்றம் கொண்டு வர முயற்சிப்பதாகவும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: ₹420 பீர்-க்கு ₹87,000 பணத்தை இழந்த பெண்... கூகுள் பே மூலம் மோசடி!
First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...