அமேசானுக்குப் போட்டியாக தள்ளுபடி அறிவிக்கும் ஃப்ளிப்கார்ட்

டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் வகைகளுக்கு 75% வரையிலான தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான தள்ளுபடியும் உள்ளதாகத் தெரிகிறது.

Web Desk | news18
Updated: January 16, 2019, 4:11 PM IST
அமேசானுக்குப் போட்டியாக தள்ளுபடி அறிவிக்கும் ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட் விற்பனை
Web Desk | news18
Updated: January 16, 2019, 4:11 PM IST
அமேசான் ஆன்லைன் விற்பனைக்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தற்போது புதிதாக ‘குடியரசு தின விற்பனை’ அறிவித்துள்ளது.

புதிதாக ‘குடியரசு தின விற்பனை’ என தள்ளுபடி விற்பனையை வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நடத்த உள்ளது ஃப்ளிப்கார்ட். இந்த விற்பனைத் திருவிழாவில் ஸ்மார்ட்ஃபோன்கள், டிவி, லேப்டாப் போன்றவற்றுக்கு சிறப்பான விலைச் சலுகை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்தத் தள்ளுபடி திருவிழாவில் எஸ்.பி.ஐ வங்கியின் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வோருக்கு 10% தள்ளுபடி உள்ளது. ’ரஷ் ஹவர் சேல்’ என்ற சர்ப்ரைஸ் தள்ளுபடி அறிவிப்புகள் மூலம் 26% வரையிலான சலுகைகளும் வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தக் காத்திருக்கின்றன. இன்னும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா கடன் போன்ற சலுகைகளும் உள்ளன.


ஃப்ளிப்கார்ட் வெளியிட்ட டீசர் அறிவிப்பில், மொபைல்களுக்கு அதிரடியான சலுகைகளும், டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் வகைகளுக்கு 75% வரையிலான தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரையிலான தள்ளுபடியும் உள்ளதாகத் தெரிகிறது.

மேலும் பார்க்க: தமிழகத்தில் ராணுவத் தளவாட மையம்! ஆதரவும் எதிர்ப்பும்
First published: January 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...