ஃபோன் முதல் டிவி வரை... ஃப்ளிப்கார்ட் நேஷனல் ஷாப்பிங் ஆஃபர்..!

ரெட்மி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உடனான ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 11,900 ரூபாய் வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Web Desk | news18
Updated: August 9, 2019, 9:45 PM IST
ஃபோன் முதல் டிவி வரை... ஃப்ளிப்கார்ட் நேஷனல் ஷாப்பிங் ஆஃபர்..!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: August 9, 2019, 9:45 PM IST
எலெக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அதிரடி சலுகைகளுடன்  ‘நேஷனல் ஷாப்பிங் சேல்’ விற்பனையை பிளிப்கார்ட் தொடங்கியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடங்கியுள்ள இந்த சலுகை விற்பனை ஆகஸ்ட் 10-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடர உள்ளது.

அமேசான் மற்றும் ஜியோமி ஆகிய ஆன்லைன் விற்பனைத் தளங்களில் சிறப்பு சுதந்திர விற்பனை நடைபெறுகிறது. ஃப்ளிப்கார்ட் இந்த சுதந்திர தின சிறப்பு விற்பனையை ஐசிஐசிஐ வங்கி உடன் இணைந்து வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கினால் 1,500 ரூபாய் வரையில் உடனடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஃபோன்களைப் பொறுத்தவரையில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் 17,900 ரூபாய் வரையில் வழங்கப்படுகிறது.

ரெட்மி, ரியல்மி உள்ளிட்ட பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கு குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உடனான ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 11,900 ரூபாய் வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பார்க்க: 64 மெகா பிக்சல் கேமிரா உடன் புதிய சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்!
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...