மோட்ரோலா, ஹானர் மொபைல்களுக்கு சிறப்பு ஆஃபர்...ஃப்ளிப்கார்ட் மாத இறுதி ஆஃபர்!

71ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்ஃபோனி ஆஃபர் விலை 49,999 ரூபாய் மட்டுமே.

மோட்ரோலா, ஹானர் மொபைல்களுக்கு சிறப்பு ஆஃபர்...ஃப்ளிப்கார்ட் மாத இறுதி ஆஃபர்!
ஃப்ளிப்கார்ட்
  • News18
  • Last Updated: July 27, 2019, 4:23 PM IST
  • Share this:
ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் மாத இறுதி மொபைல் ஆஃபர் திருவிழா தொடங்கியுள்ளது.

ஜூலை 31-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் மொபைல் ஃபோன்களுக்கான சிறப்பு தள்ளுபடி ஆஃபர் வழங்கப்படுகிறது. ஹானர் 10 லைட், ஹானர் 7s, ஹானர் 9i மற்றும் ஹானர் 9 லைட் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஓப்போ ரெனோ 10x ஜூம் மற்றும் ஹானர் 20 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ் ஆஃபரும் உள்ளது. இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில் அசூஸ் 6Z, ப்ளாக் ஷார்க் 2 மற்றும் ஐ-ஃபோன் 8 ஆகியவற்றுக்கு வட்டியில்லா தவணை முறையும் கொடுக்கப்படுகிறது.


இதுவரையில் இந்த விழாக்கால சலுகைகளிலும் வழங்கப்படாத அளவுக்கு 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் 9N ஃபோனின் விலை வெறும் 8,999 ரூபாய் மட்டுமே. 71ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்ஃபோனின் ஆஃபர் விலை 49,999 ரூபாய் மட்டுமே. குறிப்பிட்ட சில மொபைல்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் கொடுக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: விவோ Z1 ப்ரோ விற்பனை தொடங்கியது... ஃப்ளிப்கார்டில் வாங்கினால் கேஷ்பேக் ஆஃபர்..!
First published: July 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்