Home /News /technology /

Flipkart -ல் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைப்பு; 4 நாட்கள் மட்டுமே

Flipkart -ல் ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைப்பு; 4 நாட்கள் மட்டுமே

கோப்புப் படம்

கோப்புப் படம்

Flipkart-ல் இந்த விற்பனை நவம்பர் 19ம் தேதி தொடங்கி, நவம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட்டில் ‘மொபைல் போனான்ஸா’ (Mobiles Bonanza) என்ற பெயரில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விற்பனை நவம்பர் 19ம் தேதி தொடங்கி, நவம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் EMI, எக்சேன்ச் சலுகைகள் மற்றும் ஸ்கிரீன் கேர் திட்டம் போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா, சாம்சங், ஆப்பிள், ரியல்மீ போன்ற பிரபலமான பிராண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விலைக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் 20,000 ரூபாய்க்குள் பட்ஜெட் ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், சிறந்த போன்கள் குறித்து இங்கு காண்போம்.,

Realme 8 5G:

Realme 8 5G ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா’ விற்பனையில் 64GB மாடல் ரூ.15,499க்கு கிடைக்கிறது. இது 6.5-இன்ச் முழு-HD+ (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20:9 விகிதத்துடன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 700 SoC ப்ராசெஸ்சாரை கொண்டுள்ளது, மேலும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. 18W பாஸ்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது. இந்த போனிற்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 10T 5G:

Xiaomi துணை நிறுவனமான Redmi மிகவும் பிரபலமான நோட் தொடரின் கீழ் தனது முதல் 5G போனான Redmi Note 10T 5Gஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi Note 10T 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் முழு-HD+ திரையை கொண்டுள்ளது. இதில் MediaTek Dimensity 700 SoC ப்ராசெஸ்சார் உள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. Redmi Note 10T 5G போனில் கைரேகை ஸ்கேனர் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணகளில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா’ விற்பனையில் இந்த போன் ரூ. 16,179க்கு கிடைக்கிறது.

Poco M3 Pro 5G:

Redmi Note 10T 5G மற்றும் Poco M3 Pro இரண்டும் அதிக ஒற்றுமைகளை கொண்டுள்ளன, எனவே வாடிக்கையாளர்கள் விற்பனை சலுகைகளை பொறுத்து இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். Poco M3 Pro 5G ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.53-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 6ஜிபி ரேம் மற்றும் ரோமை பொறுத்தவரை 64 மற்றும் 128 என இரண்டு வெரியண்டுகளில் கிடைக்கிறது. 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. தற்போதைய சலுகையில் இந்த போனின் விலை ரூ.14,499ல் தொடங்குகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடி தள்ளுபடிகள் மற்றும் கட்டணமில்லா EMI போன்ற சலுகைகளையும் பெற முடியும்.

Moto G40 Fusion :

Moto G40 Fusion ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.8-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஃபோனில் Qualcomm Snapdragon 732G SoC ப்ராசெஸ்சார் உள்ளது. மேலும் 4GB மற்றும் 6GB RAM என இரண்டு வேரியண்டுகள் உள்ளன. மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இந்த போனில் 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா’ விற்பனையில் ரூ.13,499 என்ற விலையில் தொடங்குகிறது.

Moto G60:

Moto G60 ஸ்மார்ட்ஃபோனில் Qualcomm Snapdragon 732G SoC ப்ராசெஸ்சார் உள்ளது. இந்த போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ.16,499 விலையில் கிடைக்கிறது. 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட பெரிய 6.78-இன்ச் திரையுடன் வருகிறது. 108 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. எனவே உங்களால் துல்லியமான புகைப்படங்களை இந்த போனில் எடுக்க முடியும். மேலும் 6,000mAh பேட்டரி வசதியையும் கொண்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Flipkart, Smartphone

அடுத்த செய்தி