ஃப்ளிப்கார்ட் மொபைல் சேல்... Zenfone முதல் iPhone வரையில் சூப்பர் தள்ளுபடி!

அதிகப்பட்சமாக 60ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள LG V30+ (4GB, 128GB) ஸ்மார்ட்ஃபோன் 27,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது.

Web Desk | news18
Updated: June 17, 2019, 4:47 PM IST
ஃப்ளிப்கார்ட் மொபைல் சேல்... Zenfone முதல் iPhone வரையில் சூப்பர் தள்ளுபடி!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: June 17, 2019, 4:47 PM IST
அட்டகாசமான தள்ளுபடிகளுடன் இன்று முதல் ஃப்ளிப்கார்ட் ‘மொபைல் பொனான்சா’ ஆரம்பமாகியுள்ளது.

ஜூன் 17-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்த மொபைல் திருவிழாவில் Zenfone முதல் iPhone வரையிலான பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வால்மார்ட்டின் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உடன் ஆக்சிஸ் வங்கியும் இணைந்துள்ளது.

இதனால் இந்த மொபைல் தள்ளுபடி திருவிழாவில் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி மொபைல் வாங்கினால் 10 சதவிகித பணம் கேஷ்பேக் ஆக திரும்ப வழங்கப்படுகிறது. தவணை முறையில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 250 ரூபாய் தள்ளுபடியும் உள்ளது.


அசூஸ் Zenfone மேக்ஸ் ப்ரோ M1, நோக்கியா 6.1, ஹானர் 9i, சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் ஐஃபோன் X ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்பான தள்ளுபடி உள்ளது. 15,999 ரூபாய் மதிப்புள்ள ஹானர் 9N இந்த ஆஃபரில் 8,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதிகப்பட்சமாக 60ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள LG V30+ (4GB, 128GB) ஸ்மார்ட்ஃபோன் 27,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது.

மேலும் பார்க்க: பகுதி நேரப் பணி வேண்டுமா..?- அமேசான் ஃப்ளக்ஸ் வழங்கும் ஒரு வாய்ப்பு!
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...