ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஹெல்த்கேரில் களமிறங்கிய ஃபிளிப்கார்ட் - Flipkart Health+ ஆப் அறிமுகம்.!

ஹெல்த்கேரில் களமிறங்கிய ஃபிளிப்கார்ட் - Flipkart Health+ ஆப் அறிமுகம்.!

Flipkart Health+

Flipkart Health+

Flipkart Health Plus App | புதிதாக அறிமுகமாகி உள்ள Flipkart Health+ ஆனது apollo 247, Tata 1mg போன்ற பல பிரபல மருந்து விற்பனை பிளாட்ஃபார்ம்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 2021-ல் Sastasundar.com-ல் ஒரு பெரிய பங்குகளை வாங்கிய பின் Flipkart நிறுவனம், Flipkart Health+ ஐ அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஃபிளிப்கார்ட்டின் டிஜிட்டல் ஹெல்த்கேர் மார்க்கெட் ப்ளேஸ் பிளாட்ஃபார்மான Flipkart Health+, பிரத்யேகமாக ஃப்ளிப்கார்ட் ஹெல்த்+ ஆப்ஸை (Flipkart Health+ app) அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.

Flipkart Health+ App-ஆனது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான யூஸர்கள், தனிப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து உண்மையான மற்றும் தரமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை அணுக உதவும். மேலும் இந்தியாவில் உள்ள 20,000 பின் கோட்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் "தரமான மற்றும் மலிவு" மருந்துகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் Flipkart உறுதி அளிக்கிறது.

புதிதாக அறிமுகமாகி உள்ள Flipkart Health+ ஆனது apollo 247, Tata 1mg போன்ற பல பிரபல மருந்து விற்பனை பிளாட்ஃபார்ம்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 2021-ல் Sastasundar.com-ல் ஒரு பெரிய பங்குகளை வாங்கிய பின் Flipkart நிறுவனம், Flipkart Health+ ஐ அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

Flipkart Health+-ன் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் ஜாவேரி பேசுகையில், கோவிட் தொற்றுக்கு பின் இந்தியர்கள் ஆரோக்கியம் மற்றும் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் எங்களது Flipkart Health+ மூலம், நாடு முழுவதும் உள்ள தரமான மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலுக்கும் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பதை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்.

குறிப்பாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் எங்களது சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம் என்று கூறினார். மேலும் பேசி உள்ள அவர், சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்தும் விதத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களும் எளிதாக சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க மற்றும் ஆரோக்கியமான இந்தியாவுக்கு பங்களிக்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

Also Read : Flipkart-ல் இவ்ளோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் - முழு விவரம்

வாடிக்கையாளர்களை கவரும் யூஸர்-ஃப்ரெண்ட்லி இன்டர்ஃபேஸ் மூலம் இந்த ஆப் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறி இருக்கிறது. Flipkart Health+ பிளாட்ஃபார்மானது முதற்கட்டமாக மருத்துவ பரிந்துரைகளை சரிபார்க்க, மருந்துகளை துல்லியமாக வழங்க பதிவுசெய்யப்பட்ட ஃபார்மாசிஸ்ட்களின் நெட்ஒர்க்கை கொண்ட சுமார் 500 சுயாதீன விற்பனையாளர்களை கொண்டிருப்பதாக நிறுவனம் கூறி இருக்கிறது.

Also Read : அமேசான், கூகுளுக்கு போட்டியாக டாடாவின் புதிய Tata Neu ஆல்-இன்-ஒன் ஆப்!

வரும் நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு டெலிகன்சல்டேஷன் மற்றும் இ-டயகன்ஸ்டிக்ஸ் போன்ற வேல்யூ ஆடட் ஹெல்த் சர்விஸ்களை வழங்கும் தேர்ட்-பார்ட்டி ஹெல்த்கேர் சர்விஸ் ப்ரொவைடர்களை இணைக்க Flipkart Health+ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Flipkart Health+ தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது, இது எதிர்காலத்தில் iOS-ல் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை ஆர்டர் செய்ய Flipkart Health+க்கு ப்ரிஸ்கிரிப்ஷன் தேவைப்படலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Flipkart, Online medicine