₹4 ஆயிரத்திலிருந்து டேப்லெட்- ஃப்ளிப்கார்ட் வழங்கும் ’கேட்ஜெட்ஸ் சேல்’!

325 ரூபாய் முதலே பவர் பேங்க், 99 ரூபாய் முதல் மொபைல் சாதனங்கள் என சலுகை விற்பனை வழங்கப்படுகிறது.

₹4 ஆயிரத்திலிருந்து டேப்லெட்- ஃப்ளிப்கார்ட் வழங்கும் ’கேட்ஜெட்ஸ் சேல்’!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 25, 2019, 6:46 PM IST
  • Share this:
இன்று முதல் ஃப்ளிப்கார்ட் சார்பில் ‘தி க்ராண்ட் கேட்ஜெட்ஸ் சேல்’ விற்பனை தொடங்குகிறது.

ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தள்ளுபடி விற்பனையில் லேப்டாப், ஆடியோ, கேமிங், கேமிரா, ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் சாதனைங்கள் என அத்தனைக் கேட்ஜெட் பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடியில் சிறப்புச் சலுகைகளுடன் விற்பனைக்கு உள்ளன.

ஃப்ளிப்கார்ட் விற்பனையில் லேப்டாப்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவிகித தள்ளுபடியும் ஹெட்ஃபோன், ஸ்பீக்கர்களுக்கு 70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 325 ரூபாய் முதலே பவர் பேங்க், 99 ரூபாய் முதல் மொபைல் சாதனங்கள் என சலுகை விற்பனை வழங்கப்படுகிறது.


28,900 ரூபாய் முதல் ஆப்பிள் வாட்ச், சுமார் 32 ஆயிரம் ரூபாய் முதல் ப்ளே ஸ்டேஷன், சுமார் ஆயிரம் ரூபாய் முதல் கேமிங் கீ-போர்டு ஆகியவையும் உள்ளன. 128ஜிபி ரக ஆப்பிள் ஐ-பேட் 35,490 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளன.

இவை தர கேமிரா, டிஎஸ்எல்ஆர், டேப்லெட், பென் ட்ரைவ் என அனைத்து விதமான கேட்ஜெட்ஸ் பொருட்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் உடனான ஆஃபரும் உள்ளன.

மேலும் பார்க்க: அமேசானுக்குப் போட்டியாக அறிமுகமானது கூகுள் ஷாப்பிங்..!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்