"பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் டேஸ்" விற்பனை: லேப்டாப்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிப்பு!

பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் டேஸ்

டிவி, ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளின் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் டேஸ் விற்பனையின் போது மடிக்கணினிகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியைக் பெறலாம். 

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த மாதம் அறிமுகப்படுத்திய பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் வெற்றிக்கு பின்னர், நிறுவனம் இப்போது அதன் பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் நாட்கள் விற்பனையை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை இன்று ( டிச.1) முதல் தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு நீடிக்கும். இந்த விற்பனையில் மின்னணுவியல் சாதனங்கள், உபகரணங்கள், ஆடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பிற பிரிவுகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. 

அதன்படி பிளிப்ஸ்டார்ட் டேஸ் விற்பனை ஏற்கனவே நேரலையில் உள்ளது. மேலும் மின்னணு பாகங்கள் மீது 80 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. டிவி, ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளின் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிளிப்கார்ட் பிளிப்ஸ்டார்ட் டேஸ் விற்பனையின் போது மடிக்கணினிகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியைக் பெறலாம்.  அந்த வகையில் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த லேப்டாப்களுக்கு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களை பற்றி பார்ப்போம்.

லெவோனோ ஐடியாபேட் L340

இந்த சிறப்பு விற்பனையில் 9வது தலைமுறை இன்டெல் கோர் i7 செயலியுடன் கூடிய லெவோனோ ஐடியாபேட் L340 லேப்டாப் ரூ.70,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஸ்டிக்கர் விலையான ரூ.98,390-லிருந்து ரூ.27,400 தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, லேப்டாப்-ஐ வாங்குவோர் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளில் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம். மேலும், லெனோவா ஐடியாபேட் L340-ஐ ஈ.எம்.ஐ.யில் வாங்குவதற்கான விருப்பமும் உள்ளது. அதில் வாங்குபவர்கள் பரிமாற்றத்தில் ரூ.15,650 வரை தள்ளுபடி பெறலாம்.

ஆசஸ் TUF கேமிங் லேப்டாப்

9வது தலைமுறை இன்டெல் கோர் i5 செயலியுடன் கூடிய ஆசஸ் TUF கேமிங் லேப்டாப் அதன் ரூ.85,990 ஸ்டிக்கர் விலையிலிருந்து 24 சதவீதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி அசல் விலையில் இருந்து ரூ.21,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.64,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, வாங்குவோர் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளில் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் தள்ளுபடியை பெறலாம். மேலும், ஈ.எம்.ஐ.யில் லேப்டாப்பை வாங்குவதற்கான விருப்பமும் உள்ளது. மேலும் வாங்குபவர்கள் பரிமாற்றத்தில் ரூ.15,650 வரை தள்ளுபடி பெறலாம்.

எம்ஐ நோட்புக் 14

10வது தலைமுறை இன்டெல் கோர் i5 செயலியுடன் கூடிய எம்ஐ நோட்புக் 14 அதன் ரூ.52,999 ஸ்டிக்கர் விலையில் இருந்து ரூ.6,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.46,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வாங்குவோர் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் அதே 5 சதவீத கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுகளில் 5 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம். இதனை வாங்குபவர்கள் ரூ.15,650 வரை பரிமாற்றம் தள்ளுபடியை பெறலாம் மற்றும் இ.எம்.ஐ.யிலும் எம்ஐ நோட்புக் 14-ஐ வாங்கலாம்.

ஹெச்பி 15

இன்டெல்லின் 10வது தலைமுறை கோர் i5 செயலியுடன் கூடிய ஹெச்பி 15 லேப்டாப்கள் ரூ.49,490 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதன் அசல் ஸ்டிக்கர் விலையான ரூ.57,028-ல் ரூ.7,538 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்குபவர்கள் பரிமாற்றத்தில் ரூ.15,650 வரை தள்ளுபடி பெறலாம் மற்றும் ஹெச்பி 15-களை ஈ.எம்.ஐ.யில் கூட வாங்கலாம். மாத தவணை ரூ.5,499 முதல் தொடங்குகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக்கையும் பெறலாம் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

Also read... Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்..



ஹெச்பி பெவிலியன் x360

10வது தலைமுறை இன்டெல் கோர் i5 செயலியுடன் கூடிய ஹெச்பி பெவிலியன் x360 ரூ.62,490 விலையில் கிடைக்கிறது. அதன்படி அசல் விலையான ரூ.74,875-ல் ரூ.12,835 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹெச்பி பெவிலியன் x360-ஐ வாங்குபவர்கள் அதே ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு ஒப்பந்தங்களை, EMI மற்றும் பரிமாற்ற சலுகைகளுடன் பெறலாம்.

இதேபோல, பிளிப்கார்ட்டின் பிளிப்ஸ்டார்ட் டேஸ் விற்பனையின் போது ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த விற்பனையில் ஸ்மார்ட்வாட்சுகள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகள் ரூ.1,299 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது, தொகுக்கப்பட்ட நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்கள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் போன்றவைகளும் கிடைக்கும். இதற்கிடையில் ஸ்மார்ட் டி.வி.க்கள் ரூ.8,999 தொடக்க விலையில் கிடைக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: