அதிரடி ஆஃபரில் கேட்ஜெட்ஸ்... தொடங்கியது ஃப்ளிப்கார்ட் சேல்!

ஹெட்ஃபோன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு ஃப்ளிப்கார்டில் 70% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: May 1, 2019, 3:31 PM IST
அதிரடி ஆஃபரில் கேட்ஜெட்ஸ்... தொடங்கியது ஃப்ளிப்கார்ட் சேல்!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: May 1, 2019, 3:31 PM IST
ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘ஃப்ளிப்ஸ்டார்ட் சேல்’ இன்று முதல் தொடங்கியுள்ளது.

மே 3-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கான ‘ஃப்ளிப்ஸ்டார்ட் சேல்’ இன்று முதல் தொடங்கியுள்ளது. லேப்டாப், ஸ்பீக்கர்ஸ், ஹெட்ஃபோன்ஸ், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் ஸ்பீக்கர் என கேட்ஜெட்ஸ்-க்கு என்றே இந்த விற்பனை நடைபெறுகிறது.

அதிரடியான விலைச் சலுகைகளுடன் ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ஆஃபர் போக கூடுதலாக 10% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமாக, ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எந்தவொரு சலுகைகளும் ஆஃபர்களும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஃப்ளிப்கார்டில் புதிதாகக் கள இறங்கியுள்ள கேமிங் லேப்டாப் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கேமிங் லேப்டாப் விலை 53,990 ரூபாயில் உள்ளது. அல்ட்ரா புக் வாங்க விரும்புவோருக்கு 38,990 ரூபாய் முதலே நல்ல தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன.

ஹெட்ஃபோன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு ஃப்ளிப்கார்டில் 70% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் கேட்ஜெட்ஸ் பொருட்களுக்கும் சிறப்பான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 7,999 ரூபாய்க்கு கூகுள் ஹோம் உள்ளது. கூகுள் ஹோம் மினி-யின் விலை 3,999 ரூபாய்.

மேலும் பார்க்க: ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவால் புற்றுநோய் அபாயமா?

Loading...

First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...