இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் சமீபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது ‘பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் சேல்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையின் போது iPhone 12, சாம்சங் கேலக்ஸி F23, மோட்டோரோலா G52, iPhone 13 உள்ளிட்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மீது கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் அசத்தலான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடி விவரம்:
2021ம் ஆண்டு முதல் விற்பனையாகி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 12, தற்போது 65,900க்குக் விற்பனை ஆகி வருகிறது. இதனை பிளிப்கார்ட் தளத்தில் 53,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இதன் மூலமாக 64 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 மீது வாடிக்கையாளர்களுக்கு ரூ.11,901 தள்ளுபடி கிடைக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப்23-யின் (Samsung Galaxy F23 ) விலை 17,499 ஆகும். இப்போது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு 14,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஸ்னாப்டிராகன் 750ஜி மூலம் இயக்கக்கூடிய இது, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 6.6 இன்ச் ஸ்கிரீன் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள, இந்த 5ஜி ஸ்மார்ட் போனை பிளிப்கார்ட் மூலம் 3000 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியுடன் வாங்கி கொண்டாடுங்கள்.
மோட்டோரோலா ஜி52 (Motorola G52) ஸ்மார்ட் போனுக்கு என பிரத்யேகமான தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதன் விலையான 14,499 ரூபாயை வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் போது 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Also Read : உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?
ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஐபோன் 13 ஸ்மார்ட் போன் 79,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் சேலைப் பயன்படுத்தி, ஆன்லைனில் 5,901 ரூபாய் தள்ளுபடியுடன், 73,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இருப்பினும் அமேசான் தளம் இதே ஸ்மார்ட் போனை 70,900 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் கிரெடிட் கார்டு ஆஃபர்கள் மூலமாக அமேசான் நிறுவனம், பிளிப்கார்ட்டை விட கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.
நமக்கு எதுக்கு இந்த ஐபோன், சாம்சங் கேலக்ஸி போன்ற காஸ்ட்லி ஸ்மார்ட் போன்கள் எல்லாம் வேண்டாம், பேசிக் மாடல் போதும் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காகவே, 2021ம் ஆண்டு வெளியான ரியல் மீ சி11 (Realme C11) மாடல் மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பேசிக் மாடல் ஸ்மார்ட் போன்னான இது பிளிப்கார்ட் தளத்தில் அதன் ஆரம்ப விலையான 7,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலமாக தள்ளுபடியை பெற முடியும். எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலமாக வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பொறுத்தவரை பழைய போனின் கன்டிஷனைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.!
மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் விலை, ஜி சீரிஸ் ஃபோனான மோட்டோ ஜி 32 ஸ்மார்ட் போனை பிளிப்கார்ட் மூலமாக மேலும் குறைந்த விலையில் வாங்க முடியும். 12,999 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் இந்த ஸ்மார்ட் போனை, எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், 10 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flipkart, Offer, Smartphone