மீண்டும் ஒரு ஆஃபர் மழை! ஃப்ளிப்கார்டில் 3 நாட்களுக்கு மொபைல் திருவிழா!

ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்ஃபோன் திருவிழாவில் SBI வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்குக் கூடுதல் ஆஃபர்கள் உள்ளன.

Web Desk | news18
Updated: December 27, 2018, 6:38 PM IST
மீண்டும் ஒரு ஆஃபர் மழை! ஃப்ளிப்கார்டில் 3 நாட்களுக்கு மொபைல் திருவிழா!
realme-2 pro 4
Web Desk | news18
Updated: December 27, 2018, 6:38 PM IST
புதிய மொபைல் திருவிழாவை டிசம்பர் 29 வரையில் கொண்டாடுகிறது ஃப்ளிப்கார்ட்.

பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள் இந்த ஆஃபரில் கிடைக்கிறது. SBI வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி உள்ளது. இந்த சலுகைகள் போக கூடுதல் வட்டியில்லா EMI, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 99 ரூபாய் மதிப்பிலான மொபைல் பாதுகாப்பு கிட் ஆகியவையும் உள்ளன. இந்த ஆஃபரில் சிறந்த டீல் கொண்ட மூன்று ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்துப் பார்க்கலாம்.

Realme 2 Pro:
ஃப்ளிப்கார்ட் மொபைல் திருவிழாவில் 12,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது Realme 2 Pro. 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட மொபைலுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி உள்ளது. 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் உள்ள மொபைல் 15,990 ரூபாய் மற்றும் 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 17,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதில் ஒவ்வொரு நாளும் தள்ளுபடிக்கு ஏற்ப ஆஃபர்கள் மாறும் என்றும் ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது.

Nokia 6.1 Plus:
1000 ரூபாய் தள்ளுபடி உடன் ஃப்ளிப்கார்ட் சேலில் Nokia 6.1 Plus உள்ளது. 5.8” டிஸ்ப்ளே 19:9 aspect ratio கொண்டதாக உள்ளது. விரல்நுனி சென்சார், ஃபேஸ் சென்சார், துள்ளியமான கேமிரா என அசத்தல் தொழில்நுட்பங்களைக் கொண்டதாக Nokia 6.1 Plus உள்ளது.

Honor 9N:
Loading...
3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ள Honor 9N 8,999 ரூபாய்க்கு விற்கிறது ஃப்ளிப்கார்ட். 32ஜிபி/64ஜிபி/128ஜிபி என உள்ள Honor 9N மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் விரிவடையச் செய்துகொள்ள முடியும்.

மேலும் பார்க்க: மேற்கூரையை லாவகமாக தூக்கிச் சென்ற பெண்களுக்குக் குவியும் பாராட்டுகள்
First published: December 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...