ஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி?

17,600 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் தள்ளுபடியுடன் 12,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.

ஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி?
ஃப்ளிப்கார்ட் சேல்
  • News18
  • Last Updated: May 14, 2019, 9:27 PM IST
  • Share this:
மே 15-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே’ தொடங்குகிறது.

ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு இந்தத் தள்ளுபடி சேவை இன்று இரவு 8 மணி முதல் தொடங்குகிறது. இதர வாடிக்கையாளர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த ஆஃபர் சேல் தொடங்குகிறது.

ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனைத் திருவிழாவில் டிவி, லேப்டாப், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்ஃபோன் என எலெக்ட்ரானிக் மற்றும் கேட்ஜெட்ஸ் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. ஃப்ளிப்கார்ட் இந்தத் தள்ளுபடி விற்பனையை HDFC வங்கியுடன் இணைந்து வழங்க இருப்பதால் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.


ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்த வரையில் ஆப்பிள், சாம்சங், ஜியோமி, இவோ, ஓப்போ, அசூஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளன.

17,600 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் தள்ளுபடியுடன் 12,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல், 13,199 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 5.1 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன் 7,999 ரூபாய்க்கு விற்கப்படும். 12,900 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி ஜே 6 ஃப்ளிப்கார்ட் திருவிழாவில் 9,490 ருபாய்க்கு விற்கப்படும்.

மேலும் பார்க்க: கடந்த வார டாப்-5 திரைப்படங்கள்!
First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading