ஜூலை 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’..!

குறிப்பாக டிவி உள்ளிட்ட வீட்டு அப்லையன்சஸ்-க்கு 75% வரையிலும் ஃபேஷன் பொருட்களுக்கு 80% வரையிலும் தள்ளுபடி உள்ளது.

Web Desk | news18
Updated: July 11, 2019, 3:40 PM IST
ஜூலை 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’..!
ஃப்ளிப்கார்ட் சேல்
Web Desk | news18
Updated: July 11, 2019, 3:40 PM IST
ஜூலை 15-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் விற்பனைத் தளத்தில் சிறப்புத் தள்ளுபடிகளின் கீழ் லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன், கேட்ஜெட்ஸ் எனப் பல பொருட்கள் அதிரடி ஆஃபர்கள் உடன் விற்பனைக்கு வர உள்ளன.

ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் ஷாப்பிங் டே சேல்’ என்ற தள்ளுபடி விற்பனை ஜூலை 15-ம் தேதி முதல் ஜூலை 18-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆன்லைன் தள்ளுபடி திருவிழாவில், எலெக்ட்ரானிக், கேட்ஜெட்ஸ் எனப் பல பொருட்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன.

ஃப்ளிப்கார்ட் இம்முறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்திருப்பதால் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். குறிப்பாக டிவி உள்ளிட்ட வீட்டு அப்லையன்சஸ்-க்கு 75% வரையிலும் ஃபேஷன் பொருட்களுக்கு 80% வரையிலும் தள்ளுபடி உள்ளது.


அழகுசாதனப் பொருட்கள் 99 ரூபாயில் இருந்து கிடைக்கும். பிராண்டட் அழகு சாதனப் பொருட்களுக்கு 70% தள்ளுபடியும் குழந்தைகளுக்கான பொம்மைகளுக்கு 80% தள்ளுபடியும் உடற்பயிற்சி சாதனங்களுக்கு 80% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஒரு ஃபோன்... ஆறு கேமிரா...அட்டகாச ஆஃபர்களுடன் அறிமுகமானது நோக்கியா 9!
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...