இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பிரபல பிராண்ட்களின் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. தற்போது ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரையிலான ‘பிக் சேவிங் டேஸ்’ விற்பனையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் போது பல்வேறு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்றவற்றின் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன.
பிளிப்கார்ட் ஏற்கனவே Oppo Reno 5 Pro, iPhone 11 மற்றும் Moto G31 ஆகியவற்றில் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், விற்பனை தேதியை நெருங்கும் போது, இ-காமர்ஸ் இணையதளம் கூடுதல் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். Vivo, Oppo, Motorola மற்றும் Apple போன்ற டாப் பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மீதும் அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இது தவிர, பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது. வாடிக்கையாளர்கள் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரவுட்டர்கள், கீபோர்ட்கள் போன்ற கம்யூட்டருக்கான மென்பொருட்கள் 99 ரூபாய் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது எப்போதும் அதிரடி ஆஃபர்களை அறிவிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம், ஜூலை 23ம் தேதி ஆரம்பமாக உள்ள “பிக் சேவிங் டேஸ்” விற்பனையின் போது டேப்லெட்டுகளுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளது. மேலும், ஸ்மார்ட் வாட்சுகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், டி.வி.க்கள் மற்றும் ஸ்பீக்கர் போன்ற துணை உபகரணங்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Also Read : ஜியோவுடன் இணைந்து இறுதி கட்ட சோதனையில் சியோமி K50i - இந்தியாவில் 5G நெட்வொர்க்.!
Flipkart Plus வாடிக்கையாளர்களும் ஆரம்ப சலுகைகள் மற்றும் தள்ளுபடியை பெற வாய்ப்புள்ளது. ‘பிக் சேவிங் டேஸ்’ விற்பனை நடக்க உள்ள 5 நாட்களும் காலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு சில வங்கிகளின் பிரத்யேக சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளும் கிடைக்க உள்ளது. சில தயாரிப்புகளுக்கு நோ-காஸ்ட் EMIக்கான ஆப்ஷன்களும் இருக்கும் என பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
Also Read : ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்
இதற்கு முன்னதாக பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் சேல் நடைபெற்றது. ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 17 ஆம் தேதி வரை நடைபெற்ற விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்த விற்பனையின் போது ரூ.65,900 மதிப்புள்ள ஐபோன் 12 (64ஜிபி) ரூ.51,999-க்கு விற்பனை செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flipkart, Technology