அதிக விலை கொண்ட பிரிவில், மோடோரோலா நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த ஃபோனாக கருதப்படும் மோடோரோலா எட்ஜ் 30 ப்ரோ என்ற மொபைல் தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.5,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டுடன் கிடைக்கிறது. இது வங்கிச் சலுகையாக வழங்கப்படுகிறது. அதாவது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி எட்ஜ் 30 ஸ்மார்ட் ஃபோனை நீங்கள் வாங்கினால், ரூ.49,999 தொகைக்கு பதிலாக ரூ.45,999 செலுத்தினால் போதுமானது.
ஸ்டோரேஜ் ஆப்ஷனை பொருத்தமட்டில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது. அதாவது 8 ஜிபி ரேம் வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஃபிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் இந்த பிரத்யேக ஆஃபர் வரும் மார்ச் 16-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ வசதி :
வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி, மாதந்தோறும் ரூ.5.536 செலுத்தும் வகையில் நோ-காஸ்ட் இஎம்ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ரூ.13,000 அளவுக்கு வழங்கப்படும் எக்ஸ்சேஞ்ச் வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் எக்ஸ்சேஞ்ச்-க்கு வழங்கும் ஸ்மார்ட் ஃபோனின் தற்போதைய கன்டிஷன் பொறுத்து தான் உங்களுக்கான ஆஃபர் எவ்வளவு என்பது தீர்மானிக்கப்படும். குறிப்பாக, ஆப்பிள் ஐஃபோன் மொபைல்களைக் காட்டிலும் ஆண்டிராய்ட் மொபைல்களின் மறு விற்பனை மதிப்பு என்பது சற்று குறைவாகத்தான் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ALSO READ | ரஷ்யாவின் தடையை தவிர்க்க Dark Web வெர்ஷனை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!
மோடோரோலா எட்ஜ் 30 ப்ரோ என்பது காஸ்மோஸ் ப்ளூ மற்றும் ஸ்டார் டஸ்ட் ஒயிட் ஆகிய இரண்டு கலர்களில் வருகிறது.
மொபைல் ஸ்பெசிபிகேஷன்ஸ் :
மோடோரோலா எட்ஜ் 30 ப்ரோ என்பது சூப்பரான ஸ்பெசிபிகேஷன் வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக, குவால்காம் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்சட் கொண்டுள்ள வெகு சில மொபைல்களில் இதுவும் ஒன்றாகும். இது மட்டுமல்லாமல், மோடோரோலாவின் சிறப்பு வாய்ந்த ஹார்டுவேர் வசதி இடம் பெற்றுள்ளது.
இந்த ஃபோனில் LPDDR5 RAM, UFS3.0 ஸ்டோரேஜ், வை-பை 6இ மற்றும் 5 ஜி ஆகிய வசதிகள் உள்ளன. ஃபோனின் பின் பக்கத்தில் இரண்டு 50 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் டெப்த் சென்சார் உடன் டிரிபிள் கேமரா வசதி உள்ளது. ப்ரைமரி ரியர் கேமராவில் 30 எஃப்.பி.எஸ். வரையிலும் 8K தரத்தில் வீடியோ ரெக்கார்ட் செய்யலாம்.
ALSO READ | உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்ய வேண்டுமா? படிப்படியான வழிமுறை இதோ
ஃபோனின் முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக 60 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது. இது 6.7 இன்ச் ஓஎல்ஈடி ஸ்கிரீன் கொண்டது. இந்த ஃபோனில் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் 4,800 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ளது. 40 நிமிடங்களுக்குள் இதில் முழு சார்ஜ் ஏறி விடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.