HOME»NEWS»TECHNOLOGY»flipkart big saving days sale and amazon great republic day sale here are the best deals on mobile phones vin ghta

பிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற ஆபர்கள்!

இந்த சலுகை விற்பனையானது ஜனவரி 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற ஆபர்கள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated :
  • Share this:

பிளிப்கார்ட்டில் ஜனவரி 20 முதல் Big Saving Days sale விற்பனை தொடங்கவுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் புதிய ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க சரியான நேரம். மேலும் பிளிப்கார்ட் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து 10% உடனடி தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த சலுகை விற்பனையானது பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 19ம் தேதி காலை 12 மணி முதலே தொடங்கவுள்ளது. 

இதேபோல அமேசான் தளத்திலும் 2021ம் ஆண்டின் குடியரசு தின விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையானது ஜனவரி 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 19ம் தேதி முதலே விற்பனை தொடங்குகிறது. இதனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை தளத்தில் மொபைல்கள் மற்றும் கேஜெட்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இது தவிர லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் பேண்டுகள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டீவிகளும் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கின்றன. 

சிறந்த ஆஃபர் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்:



சாம்சங் கேலக்ஸி எஸ் 20 + (Samsung Galaxy S20+)

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 + 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ .44,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் இன்ஃபினிட்டி-ஓ டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் ப்ராசஸ்சார் , 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு திறனுடன், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பு 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 10 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா அம்சத்துடன் கிடைக்கிறது. யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் சார்ஜிங் அம்சத்துடனும், 4,500 mAh பேட்டரியுடனும் கிடைக்கிறது.  சாம்சங் எஸ் 20 + ஆரம்பத்தில் இந்தியாவில் ரூ .73,999 விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 12 மினி  ஸ்மார்ட்போன் (iPhone 12 mini) 

ஐபோன் 12 மினி 2020ம் ஆண்டின் சிறந்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். Amazon’s big sale விற்பனையில் ஐபோன் 12 மினி ரூ .59,990க்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு யூசர்களுக்கு கூடுதலாக 10% சலுகை வழங்கப்படும். ஐபோன் 12 மினி ஆனது 5.4 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் 12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமராக்கள் உள்ளன, அவை வைட் ஆங்கிள் மற்றும் அல்ட்ரா வைட்-ஆங்கிள் ஷூட்டரை உள்ளடக்கி  எஃப் / 1.6 லென்ஸ் மற்றும் எஃப் / 2.4 லென்ஸ் உடன் வருகிறது. 

ஆசஸ் ROG 3 ஸ்மார்ட்போன் (Asus ROG Phone 3) 

ஆசஸ் ROGV 3 ஸ்மார்ட்போன் Flipkart’s Big Saving Days விற்பனையின் போது ரூ .43,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. எச்டிஎப்சி டெபிட் கார்ட்கள் மூலம் வாங்கும்போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.59' இன்ச் முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் ப்ராசெஸ்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டுள்ளது. ஆசஸ் ரோக் 3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனாகும். 

ஒன்பிளஸ் 8டி  (Oneplus 8 T) 

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,499 ஆகும். அமேசான் விற்பனையின் போது ஒன்பிளஸ் 8டி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 1080x2400 பிக்சல், புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் 48 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா,  16 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்துடன் கிடைக்கிறது. 

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ (Samsung’s Galaxy S20 FE) 

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ ஸ்மார்ட்போன் அமேசான் விற்பனையின் போது ரூ .40,999க்கு கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ .49,999 ஆகும். இதேபோல ஜனவரி 20-ம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் விற்பனையின் போது, சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனை ரூ.13,999-க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆகும். மேலும் கேலக்ஸி ஏ21 எஸ், கேலக்ஸி ஏ31 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.13,999, ரூ.16,999 மற்றும் ரூ.20,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also read... கார்களின் ரேன்ஜிற்கேற்ப விலையை உயர்த்திய Maruti Suzuki நிறுவனம் - புதிய விலை விவரம்!

மோட்டோ ஜி 5ஜி & ஜி 9 ஸ்மார்ட்போன்கள் (Moto G5 & G9) 

மோட்டோரோலா சமீபத்தில் தனது பட்ஜெட் 5ஜி தொலைபேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் அசத்தலான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.18,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல நீங்கள்  ரூ .10,000 க்கு கீழ் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் மோட்டோ ஜி 9 சிறந்த தேர்வாக இருக்கும். பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் ரூ .9,999 க்கு விற்பனைக்கு வர உள்ளது.

ரியல்மி7 ப்ரோ & எக்ஸ் 50 ப்ரோ (Realme 7 pro & X50 pro) 

ரியல்மி 7 ப்ரோ இந்தியாவில் ரூ.20,000 க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். பிளிப்கார்ட்டின் விற்பனையின் போது கூடுதலாக ரூ .1,000 விலைக் குறைப்பு செய்து ரூ .18,999 முதல் தொடங்குகிறது. இதேபோல இந்தியாவின் முதல் 5ஜி  ஸ்மார்ட்போனான ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ .31,999 முதல் தொடங்குகிறது. 



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: