இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ‘Flipkart Big Saving Days Sale 2022’விற்பனையை அறிவித்துள்ளது. ஆன்லைன் தளமான பிளிப்கார்ட் ஆண்டுதோறும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சலுகைகள் நிறைந்த சிறப்பு விற்பனையை அறிவித்து வருகிறது. இந்தியாவில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் ‘Flipkart Big Saving Days Sale 2022’ விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த விற்பனையானது ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அமேசான் தனது கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்தப்போவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அதற்கு போட்டியாக பிளிப்கார்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டி.வி., ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களை அதிரடியான விலையில் வாங்கலாம். குறிப்பாக ஆப்பிள், விவோ, ஒப்போ, மோட்டோரோலா உள்ளிட்ட பல பிரபலமான பிராண்ட் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
பிளிப்கார்ட் தளத்தின் இந்த சிறப்பு விற்பனையோடு, ஐசிஐசிஐ, கோட்டாக் மாதிரியான வங்களின் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது. ஸ்மார்ட் டி.வி. மற்றும் உபகரணங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை Samsung, Realme, Xiaomi உள்ளிட்ட பிரபலமான பிராண்ட்களுக்கு கிடைக்கிறது. ஏர் கன்டிஷனர்கள் மீது 55 சதவீதம் வரை தள்ளுபடியும், மைக்ரோவேவ்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, 10 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இவை தவிர, வாடிக்கையாளர்கள் Apple, Vivo, Oppo, Motorola மற்றும் பிற பிராண்டுகளின் பிரபலமான ஸ்மார்ட் போன்கள் மீது தனித்தனி சலுகைகளை பெற உள்ளனர். குறிப்பாக ஐபோன் வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டு வருவோருக்கு பொன்னான வாய்ப்பாக, ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீது நல்ல ஆஃபர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்
வழக்கம் போலவே ‘பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்’ விற்பனையின் போது அதிகாலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு "கிரேசி டீல்கள்" அறிவிக்கப்பட உள்ளன. இந்த முறை அதிகாலை 2 மணிக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளைக் கொண்ட "ரஷ் ஹவர்ஸ்" விற்பனையும் அறிவிக்கப்பட உள்ளது. பிளிப்கார்ட் பல்வேறு தயாரிப்புகளுக்கான சரியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை இதுவரை வெளியிடவில்லை என்றாலும், விற்பனை தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு பொருட்கள் மீதான ஆஃபர்கள் குறித்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.