• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பிளிப்கார்ட் அதிரடி தீபாவளி சேல் - உங்க பட்ஜெட்டில் இந்த 5 போன்களை வாங்கி மகிழ்ந்திடுங்கள்!

பிளிப்கார்ட் அதிரடி தீபாவளி சேல் - உங்க பட்ஜெட்டில் இந்த 5 போன்களை வாங்கி மகிழ்ந்திடுங்கள்!

Flipkart

Flipkart

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு "பிக் தீபாவளி சேல்" என்கிற அதிரடி விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

  • Share this:
ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு "பிக் தீபாவளி சேல்" என்கிற அதிரடி விற்பனையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. அக்டோபர் 28ம் தேதி முதல் இந்த விற்பனை ஆரம்பமாகி உள்ளது. ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஃபேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பலவற்றிற்கும் சிறப்பான தள்ளுபடியை இந்த விற்பனையில் தந்துள்ளனர். இதில் அனைவரையும் கவரும் வகையில் உள்ள கூகுள் பிக்சல் 4a, ரியல்மீ X7, ஏசஸ் ROG போன் 5, ஐபோன் 12, சாம்சங் கேலக்சி F42 5G போன்ற சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு 10% வரை அதிரடி தள்ளுபடி உள்ளது. இவற்றின் தள்ளுபடி விவரங்கள் பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 4a :

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.25,999. ஆனால் இந்த பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் எஸ்.பி.ஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1250 குறைந்து, ரூ.24,729 தள்ளுபடி விலையில் பெறலாம். இதன் 6GB + 128GB ஸ்டோரஜ் வகை ஸ்மார்ட்போனுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும்.

Also read: JioPhone Next ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு வெளியீடு… ₹ 1,999 செலுத்தி வாங்கலாம்…. சிறப்பம்சங்கள் இதோ….

ஏசஸ் ROG போன் 5 :

இந்த தீபாவளிக்கு ஏசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமாக இருப்பவர்களுக்கு இனிப்பான செய்தி உள்ளது. 8GB + 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.55,999 ஆகும். இந்த தள்ளுபடியில் ரூ.49,999-க்கு இந்த மொபைலை எடுத்துச் செல்லலாம். மேலும் கேமிங் சார்ந்த பொருட்களுக்கு 10% தள்ளுபடி என்கிற வகையில் ரூ.1250 வரை தள்ளுபடி உண்டு.

ஐபோன் 12 :

பலரின் கனவு மொபைல் என்றே ஆப்பிள் ஐபோன் மொபைலை சொல்லலாம். இந்த வருட தீபாவளிக்கு ஐபோன் 12 வாங்க நினைப்போருக்கு இந்த பிளிப்கார்ட் தள்ளுபடி அதிகம் உதவும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.53,999-க்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் 5ஜி வசதி, 24 எம்பி பின்புற கேமரா, 12 எம்பி செல்பி கேமரா, 6.1 இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது. எஸ்.பி.ஐ கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு கூடுதல் தள்ளுபடியாக ரூ.1,250 பெறலாம்.

Also read:  சென்னையில் பிறந்தவர்.. 10 வயதில் தேசிய விருது… மறைந்த புனித் ராஜ்குமாரின் சினிமா குடும்ப பின்னணி!

ரியல்மீ X7 :

உங்கள் பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்போ உங்களுக்கான சாய்ஸ் இந்த ரியல்மீ X7 தான். மீடியாடெக் டைமென்சிட்டி 800U 5G SoC வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 3 ரியர் கேமிரா உள்ளது. இந்த பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ரூ.19,999-க்கு இதை வாங்கி செல்லலாம். மேலும் கூடுதல் 10% தள்ளுப்படிக்கு எஸ்.பி.ஐ கார்டு பயன்படுத்துங்கள்.

சாம்சங் கேலக்சி F42 5G :

சாம்சங் மொபைல் பிரியர்களுக்கு ஏற்ற அதிரடி தள்ளுபடி இது. சாம்சங் கேலக்சி F42 5G ஸ்மார்ட்போனிற்கு ரூ.6,000 அதிக தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. ரூ.25,999 விற்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.19,999-க்கு பெறலாம். இந்த போனில், 64 எம்பி கேமரா, 5000 பேட்டரி மற்றும் 15 சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

இந்த பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையை பயன்படுத்தி உங்களின் கனவு ஸ்மார்ட்போன்களை வாங்கி கொண்டாடுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: