• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஃபிளிப்கார்ட் தீபாவளி சலுகை: ஆஃபரில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

ஃபிளிப்கார்ட் தீபாவளி சலுகை: ஆஃபரில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Flipkart deepavali sale

Flipkart deepavali sale

தீபாவளி ஆஃபரில் ஃபிளிப்கார்ட்டின் இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 23 வரை மட்டுமே

  • Share this:
ஃபிளிப்கார்ட் அதிரடி தீபாவளி சலுகைகளை இந்தியாவில் வாரி வழங்கியிருக்கிறது. அனைத்து வகையான பொருட்களிலும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள ஃபிளிப்கார்ட்டில், மொபைல் ஃபோன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பு சலுகைகளைக் காணலாம். போகோ, மோட்டோ G40 உள்ளிட்ட பட்ஜெட் மொபைல்களும் இந்த ஆண்டு மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. 15000 ரூபாய்க்கு குறைவான விலையில் ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியல் இங்கே.,

மோட்டோ G40 ஃபியூஷன்:

மோட்டோரோலா மொபைல்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. பல்வேறு புதிய மாடல்களை உருவாக்கி வரும் மோட்டோ நிறுவனம், தற்போது மோடோ G40 ஃபியூஷன் என்ற புதிய பட்ஜெட் ஃபிரெண்ட்லி மாடலை தீபாவளிக்கு இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டிராய்டு 11 வெர்ஷன் உடன் கட்டமைக்கப்பட்ட இந்த மொபைலில், 6.8 இன்ச் முழு HD திரையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G SoC ப்ராசெஸ்ஸார் அம்சத்துடன் வருகிறது. மற்றொரு சிறப்பு அம்சமாக, இந்த மொபைல் 64MP பிரைமரி சென்சார் உடன் வரும் டிரிபிள் கேமராவையும் கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் தீபாவளி அதிரடி சலுகையில் இந்த மொபைல் ரூ. 13,499 முதல் கிடைக்கின்றது.

Also read:  பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!

சாம்சங் கேலக்சி F12:

சாம்சங் மொபைல்களுக்கு அறிமுகம் தேவையில்லை. லட்சக்கணக்கான யூசர்களைக் கொண்ட சாம்சங், அவ்வபோது புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தவறுவதே இல்லை. தற்போது, தீபாவளி அறிமுகமாக சாம்சங் கேலக்சி F12 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடல் 6.5 இன்ச் HD மற்றும் Infinity-V டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate), 4GB RAM உடன் இணைக்கப்பட்ட octa-core Exynos 850 SoC ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த போனின் மற்றொரு சிறப்பம்சம் இதன் 48 MP பின்புறக் கேமரா தான். கேலக்சி F12 64GB மாடலின் அசல் விலை ரூ. 12,999, தற்போது தீபாவளியை முன்னிட்டு, ரூ. 9,499க்கு கிடைக்கிறது.

போகோ M3 ப்ரோ 5ஜி:

பட்ஜெட் மொபைல்கள் என்றாலே, PoCo மொபைல்களுக்கென்றே தனி இடம் இருக்கும். அதிலும் இந்த ஆண்டு தீபாவளி அதிரடி சலுகையில், போகோ M3 ப்ரோ 5ஜி மொபைல் இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் 6.53 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) உடன் வருகிறது. மீடியா டெக் டைமென்சிட்டி 700 SoC ப்ராசெஸ்ஸாரால் இயக்கப்படுகின்றது. இந்த போன் 6GB RAM மற்றும் 48MP டிரிப்பில் ரியர் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. மேலும் 5,000mAh பேட்டரி, 18W அதிவேக சார்ஜ் செய்யும் அம்சத்தையும் கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் அதிரடி தீபாவளி விற்பனையில் இந்த மொபைல் ரூ. 14,499 முதல் கிடைக்கின்றது.

Also read: தீபாவளி ஷாப்பிங்.. லிட்டில் இந்தியாவில் சிங்கப்பூர் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள்!

ரியல்மி 8i:

ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை காலத்தில், இந்த ரியல்மி 8i மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகையாக 10% கூடுதல் சலுகையையும் வழங்கியுள்ளது. ஆண்டிராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0, மிகவும் தனித்துவமான மாடல். இந்த மொபைலின் ரியர் கேமரா 50MP மற்றும் முன்புற கேமரா 16MP ஆகும். பிற பட்ஜெட் மொபைல்களில் இல்லாத அளவுக்கு, உயர் மெகாபிக்சல்கள் கொண்ட ரியர் மற்றும் முன்புற கேமராக்கள் ரியல்மி 8i-ன் சிறப்பம்சமாகும். லேட்டஸ்ட் மீடியா டெக் ஹீலியோ G96 SoC ப்ராசெஸ்ஸார் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வரும் இந்த மொபைலின் விலை ரூ. 13,999 மட்டுமே.

மைக்ரோமேக்ஸ் IN நோட் 1:

"மேட் இன் இந்தியா" பிராண்டான மைக்ரோமேக்ஸ் இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் Micromax IN Note 1 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மீடியா டெக் ஹீலியோ G85 SoC ப்ராசெஸ்ஸார் உடன், 4GB மற்றும் 64GB அம்சங்களை கொண்டுள்ள இந்த மொபைலில் மூன்று சென்சார்கள் உள்ள 48MP கேமராவும் உள்ளது. இதன் விலை ரூ. 9,499 மட்டுமே.

ஃபிளிப்கார்ட்டின் இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 23 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: