• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இதுவே சரியான தருணம் - தீபாவளி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!

பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இதுவே சரியான தருணம் - தீபாவளி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

Flipkart Big Diwali sale: ஆரம்பத்தில் ரூ.35,990க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 தற்போது அதிரடி சலுகையாக ரூ .11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ தீபாவளியை முன்னிட்டு பல்வேறு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஏர்போட்கள், சாம்சங் கேலக்ஸி வாட்ச், ரியல்மி புக் ஸ்லிம், மி டிவி 4 ஏ போன்றவற்றின் மீது அதிரடி சலுகைகளை வழங்குகிறது.

ஆப்பிள் ஏர்போட்கள் :

இந்த தீபாவளி ஆஃபரில் முக்கியமானது ஆப்பிள் ஏர்போட்கள் தான். கிட்டத்தட்ட ரூ .8,099க்கு நீங்கள் வயர்லெஸ் ஆப்பிள் ஏர்போட் பெற முடியும். TWS இயர்பட்ஸ்களுடன் வரும் இது, 24 மணிநேரம் வரை இயங்கும் பேட்டரி வசதியுடன் வருகிறது. எஸ்பிஐ வங்கியின் கார்டை வைத்து வாங்கும் போது மேலும் 900 ரூபாய் தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் ஏர்போட்ஸ் புரோ ரூ .24,900 லிருந்து குறைக்கப்பட்டு ரூ.17,999க்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் :

ஆரம்பத்தில் ரூ.35,990க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 தற்போது அதிரடி சலுகையாக ரூ .11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு ஒரு 4G ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதில் 5ATM மற்றும் IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதியை உள்ளடக்கி இருக்கிறது. 5 நாட்கள் வரை பேட்டரி தாங்குகிறது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் ரவுண்ட் டயல் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

ரியல்மி புக் ஸ்லிம் :

ரியல்மி நிறுவனத்தின் சக்ஸஸ் லேப்டாப் மாடலான ‘ரியல்மி புக் ஸ்லிம்’ ரூ .46,999லிருந்து குறைக்கப்பட்டு ரூ. 40,999க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இன்டெல் கோர் i3 ப்ராசெஸ்ஸார் வசதியில் குறைந்த விலையில் ரியல்மியின் லேப்டாப் வருவது இதுவே முதல்முறை.

கூகுள் பிக்சல் பட்ஸ் :

ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது. கூகுளின் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் பட்ஸ் ரூ. 7,199 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ .9,999 ஆகும்.

ரியல்மி கேபிள் ஸ்பீக்கர் :

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மியின் கேபிள் ஸ்பீக்கர் அதிகம் பேரால் வாங்கப்பட்டு வருகிறது. தள்ளுபடி விலையில் தற்போது 1,399 ரூபாய்க்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் :

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸின் மீது அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. ரூ .14,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் ரூ .5,990 க்கு விற்பனை செய்கிறது.இந்த பிளிப்கார்ட் தீபாவளி சலுகையில் மிஸ் செய்யக்கூடாத சலுகைகளில் இதுவும் ஒன்றாகும்.

Xiaomi Mi TV 4A :

சியோமியின் ஆண்ட்ராய்ட் டிவியான ‘Mi TV 4A Horizon’ எடிசன் ரூ .27,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் போது இதனை ரூ .26,300 விலைக்கு பெறலாம். Chromecast வசதியுடன் வரும் இதில், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்றவற்றை பார்க்கும் வசதியும் உள்ளது.

Also read... வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்ப்பது எப்படி?

தாம்சன் 9 ஆர் ப்ரோ :

தாம்சன் நிறுவனத்தின் ‘9 ஆர் ப்ரோ’ ஸ்மார்ட் டிவி ரூ. 23,999 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் டிவியாகும். எஸ்பிஐ கிரெடிட் கார்டை வைத்து வாங்கும் போது கூடுதலாக ரூ .1500 தள்ளுபடி பெறலாம்.

JBL Go Plus :

ஸ்பீக்கரில் பாட்டு கேட்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர் இது. JBL Go Plus ஸ்பீக்கர் பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ .1,599 க்கு கிடைக்கிறது. இது 5 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா-போர்ட்டபிள் ஸ்பீக்கர் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றுடன் இணைத்தும் இதனை பயன்படுத்தலாம்.2,000 ரூபாய்க்கு கீழ் ஸ்பீக்கர் வாங்க விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: