ஃப்ளிப்கார்ட் ‘பிக் சேல்’ - எந்த மொபைலுக்கு எவ்வளவு ஆஃபர்?

ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தள்ளுபடி விற்பனை இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 6:02 PM IST
ஃப்ளிப்கார்ட் ‘பிக் சேல்’ - எந்த மொபைலுக்கு எவ்வளவு ஆஃபர்?
ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தள்ளுபடி விற்பனை இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
Web Desk | news18
Updated: December 6, 2018, 6:02 PM IST
ஃப்ளிப்கார்ட் ‘Big Shopping Day Sale' இன்று முதல் தொடங்கியுள்ளது. இம்முறை ஃப்ளிப்கார்ட் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் ‘பிக் டே சேல்’ இன்று டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி டிசமப்ர் 8-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த விற்பனைத் திருவிழாவில் Honor 9N, Honor 10, Honor 9 Lite, Honor 10 உள்ளிட்ட பல மொபைல் ஃபோன்களுக்கு சிறப்பான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோக எக்சேஞ்ச் ஆஃபர்களும் பல மொபைல் ஃபோன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ‘பிக் டே சேல்’ விற்பனைக் காலத்தில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் ஃப்ளிப்கார்ட் 10 சதவிகிதம் ஸ்பாட் தள்ளுபடி அளிக்கிறது.

இந்த தள்ளுபடி விற்பனையின் டாப் பட்டியலில் இருக்கும் மொபைல் ஃபோன்கள் குறித்துப் பார்க்கலாம்.

Honor 9N:
3ஜிபி RAM உடன் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Honor 9N இந்தத் தள்ளுபடி விற்பனையில் 8,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் 4 ஜிபி RAM உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Honor 9N 10,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 32/64/128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்கள் எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரையில் பயன்படுத்த முடியும். Honor 9N மொபைலின் டிஸ்ப்ளே 5.84” ஆக உள்ளது.

Honor 10:
Loading...
32,999 ரூபாய் மதிப்புள்ள Honor 10, ரூ.8,000 தள்ளுபடி உடன் ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் 24,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுமினிய ஃப்ரேம், அரோரா க்ளாஸ் கொண்ட டிஸ்ப்ளே 5.84” ஆக உள்ளது.

Honor 9 Lite:
3 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ், 5.65” டிஸ்ப்ளே என அசத்தும் Honor 9 Lite தள்ளுபடியில் 11,999 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Honor 9i:
ஃப்ளிப்கார்ட்டில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் Honor 9i 11,999 ரூபாய்க்கு விற்பனை ஆகும். 5.84” டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல் 4 ஜிபி RAM கொண்டதாக அமைந்துள்ளது.

மேலும் பார்க்க: தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? - பொன்னையன் பதில்
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்