Home /News /technology /

Flipkart Big Billion Days Sale | அதிரடி ஆபருடன் ஆரம்பமாகும் பிளிப்கார்ட் விற்பனை.! 

Flipkart Big Billion Days Sale | அதிரடி ஆபருடன் ஆரம்பமாகும் பிளிப்கார்ட் விற்பனை.! 

பிக் பில்லியன் டே சேல்

பிக் பில்லியன் டே சேல்

Flipkart Big Billion Days Sale | பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே சேல்” விற்பனையானது செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் பண்டிகை காலம் வர உள்ளதால் ஆன்லைன் தளங்கள் அடுத்தடுத்து அதிரடி ஆபர்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் பிரபலமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், பண்டிகை கால சிறப்பு விற்பனையாக “பிக் பில்லியன் டே சேல்” என்ற பெயரில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே சேல்” விற்பனையானது செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. Flipkart Plus வாடிக்கையாளர்களுக்கு மட்டும் “பிக் பில்லியன் டே சேல்” ஆபர் திருவிழா ஒருநாள் முன்னதாக செப்டம்பர் 22ம் தேதியே தொடங்கிறது. பிளிப்கார்ட் வழங்கும் சலுகைகளுடன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி வழங்கும் 10 சதவீத எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்க உள்ளது.

“பிக் பில்லியன் டே சேல்” என்றாலே லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் முதல் எலக்ட்ரானிக் கேஜெட்கள் வரை குறைவான விலையில் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் அள்ளிக்கொள்ளலாம். இந்த முறை விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் விற்பனைக்கான சலுகையை அறிவித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.



போகோ, ஓபோ, மோட்டோரோலா முதல் ஐபோன் வரை அசத்தலான தள்ளுபடி விலையுடன் விற்பனைக்கு காத்திருக்கிறது. குறிப்பாக Apple iPhone இல் "கிரேசிஸ்ட் எவர் ப்ரைஸ்" என்ற டீல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 11, 12 மற்றும் 13 சீரிஸ் போன்கள் தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட் போன் விற்பனை குறித்தும் பிளிப்கார்ட் பதிவிட்டுள்ள ட்வீட் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read : குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.

அதில் 43,999 ரூபாய் மதிப்புள்ள கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை பிக் பில்லியன் டே சேல் சிறப்பு தள்ளுபடியில் 34,199 ரூபாய்க்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா தள்ளுபடியை எதிர்பார்ப்பவர்கள், ப்ரீபெய்ட் கட்டண முறையை தேர்ந்தெடுத்தால் ரூ.3500 தள்ளுபடி கிடைக்கும் என்றும், ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டி, கழித்து பார்த்தால் பிக் பில்லியன் டே விற்பனையில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட் போனை 27, 699 ரூபாய்க்கு வாங்கிவிடலாம்.



தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகள் தவிர, ரியல் மீ, ஓபோ, சாம்சங், கூகுள், ஜியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் மீது “அன்பிட்டபிள் எக்ஸ்சேஞ்ச் பிரைஸ்” (Unbeatable Exchange Prices) என்ற டீலை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. அதாவது எக்ஸ்சேஞ்ச் போன்களுக்கு சிறப்பான ஆபர்கள் கிடைப்பதோடு, EMI விருப்பங்களையும் வழங்குகிறது. மேலும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களை 5ஜி போன்களாக விற்பனைக்கு கொண்டு வரவும் பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.

Also Read : 6 மணிக்கு மேல வேலை செய்யமாட்டேன் பாஸ்... ஓவர்டைம் பார்த்தால் கழண்டு ஓடும் சூப்பர் மவுஸ் அறிமுகம்..

பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் மீதான சலுகை விலையை பிளிப்கார்ட் அறிவித்திருந்தாலும் சில குறிப்பிட்ட மாடல்களின் ஆபரை அறிவிக்காமல் உள்ளது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல்களில் வரவிருக்கும் சலுகைகள் மற்றும் பழைய ஐபோன்களுக்கான எக்ஸ்சேஞ்ச் விலைகள் பற்றி அறிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Big Billion day sale, Flipkart, Technology

அடுத்த செய்தி