• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை - ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை - ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

ரெட்மி நோட் 10டி 5ஜி மற்றும் போக்கோ எம்3 ப்ரோ இரண்டும் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளன, எனவே வாடிக்கையாளர்கள் விற்பனை சலுகைகளை பார்த்து வாங்கி கொள்ளலாம்.

  • Share this:
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் 3ம் தேதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடங்கியது. இதில் டிவி, வாஷிங் மெஷின், வீட்டு உபயோக பொருட்கள், கேஜெட்டுகளுக்கு சலுகை அறிவித்துள்ளனர். மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு உடனடி தள்ளுபடி சலுகைகளும் அறிவித்துள்ளனர். ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ. 20,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்.,

Realme 8 5G:

Realme 8 5G ஸ்மார்ட்போன் 64GB மாடல் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.15,499க்கு கிடைக்கிறது. இந்த போன் 6.5-இன்ச் முழு எச்டி+ (1,080 × 2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 20: 9 விகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் refresh rate-வுடன் கிடைக்கிறது. ஹூட்டின் கீழ், இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC-ஐ கொண்டுள்ளது. பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது. ஒரு வருட வாரண்டியுடன் இந்த போன் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி:

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ரெட்மி சமீபத்தில் தனது முதல் 5ஜி போனான ரெட்மி நோட் 10டி-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த போன் 90 ஹெர்ட்ஸ் refresh rate-வுடன் 6.5 இன்ச் முழு எச்டி+ திரையை கொண்டுள்ளது. இதிலும் மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. மேலும் 5,000 எம்ஏஎச் பேட்டரி, 18W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.16,799க்கு கிடைக்கிறது. மேலும் ஐசிஐசிஐ கார்டை பயன்படுத்தினால் 15,440க்கு பெற முடியும்.

போகோ எம்3 ப்ரோ 5ஜி:

ரெட்மி நோட் 10டி 5ஜி மற்றும் போக்கோ எம்3 ப்ரோ இரண்டும் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளன, எனவே வாடிக்கையாளர்கள் விற்பனை சலுகைகளை பார்த்து வாங்கி கொள்ளலாம். போகோ எம்3 ப்ரோ 5 ஜி 6.53 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் refresh rate-வுடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி உள்ளது. பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ .14,499ல் தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் கார்டுகளை பயன்படுத்தி 13,249 விலைக்கு வாங்கலாம், மேலும் கட்டணமில்லா இஎம்ஐ போன்ற சலுகைகளையும் பெற முடியும்.

மோட்டோ ஜி 40 ஃப்யூஷன்:

மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் 6.8 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் refresh rate-வுடன் வருகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டு விருப்பங்கள் உள்ளது. மேலும் 64 எம்பி கொண்ட மூன்று பின்புற கேமரா மற்றும் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இதுதவிர இரட்டை சிம், கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்போன் ரூ .12,999க்கு கிடைக்கிறது.

Also read... வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

சாம்சங் கேலக்ஸி F42 5G:

சாம்சங் கேலக்ஸி F42 5G சிறப்பு அறிமுக விலையில் ரூ. 17,999க்கு கிடைக்கிறது. மேலும் ஐசிஐசிஐ வாங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் கூடுதல் 10% சலுகை கிடைப்பதால் ரூ.16,749க்கு வாங்க முடியும். இந்த போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC உடன் வருகிறது. 64 எம்பி ஆதரவுடன் மூன்று பின்புற கேமராக்கள், 8 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த போனில் 5ஜி, 4ஜி மற்றும் 3ஜி, 2ஜி ஆதரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: