• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Big Billion Days 2021: ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்!

Big Billion Days 2021: ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்!

பிக் பில்லியன் டேஸ்

பிக் பில்லியன் டேஸ்

ஃபிளிப்கார்ட்டின் Big Billion Days திருவிழா அநேகமாக அடுத்த மாத துவக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட் போன்கள் மீது வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சலுகை நன்மைகளை பெறலாம் என்று தெரிகிறது.

  • Share this:
கடந்த சில வருடங்களாக டிரெஸ்கள், அக்சஸரிஸ்கள், ஷூக்கள், ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், லேப்டாப்கள் என நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது. ஷோரூம்களில் விற்கப்படும் ரேட்டை விட, ஆன்லைன் ஷாப்பிங் வசதியை அளிக்கும் நிறுவனங்கள் சிறந்த விலையில் ரேட்டில் பொருட்களை விற்பதால் பலரின் கவனம் இ-காமர்ஸ் ஆப்ஷனை நோக்கி திரும்பி பல ஆண்டுகள் ஆகிறது.

நம் நாட்டில் பிரபலமாக விளங்கும் இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பிளிப்கார்ட் , ஆண்டுதோறும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் அதிரடி தள்ளுபடிகள் அடங்கிய மாபெரும் விற்பனை திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்க்கான் ஃபிளிப்கார்ட்டின் Big Billion Days திருவிழா அநேகமாக அடுத்த மாத துவக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட் போன்கள் மீது வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சலுகை நன்மைகளை பெறலாம் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏனென்றால் Big Billion Days விற்பனையின் போது சாம்சங், போகோ, ஒப்போ, ரியல்மி, விவோ, மோட்டோரோலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய போன்களை அறிமுகப்படுத்த உள்ளன. இதை வெளிப்படுத்தும் விதமாக மோட்டோரோலா, ஒப்போ, சாம்சங், விவோ மற்றும் ரியல்மி ஆகியவற்றிலிருந்து பல புதிய ஸ்மார்ட்போன்களின் லாஞ்ச் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு பிரத்யேக மைக்ரோசைட் ஃபிளிப்கார்ட் கொண்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் வரவிருக்கும் டிவைஸ்களின் பெயர்களை ஃப்ளிப்கார்ட் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், வரும் செப்டம்பர் 24 அன்று ரியல்மி நர்சோ 50 சீரிஸ் இந்தியாவுக்கு வர இருக்கிறது.

Big Billion Days 2021-ற்கான அதிகாரப்பூர்வ விற்பனை தேதி குறித்த தகவல்களை ஃபிளிப்கார்ட் இன்னும் அறிவிக்காத நிலையில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை பல புதிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகும் என்று அதன் டெடிகேட்டட் மைக்ரோசைட்டில் Reveal Calendar என்ற செக்ஷனில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி முதலில் Realme Narzo 50 சீரிஸ், செப்டம்பர் 24 அன்று வெளியாகிறது. இதனை தொடர்ந்து ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முறையே செப்டம்பர் 27 & செப்டம்பர் 28 தங்கள் புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Also read... இந்தியாவில் வரும் செப்டம்பர் 30-ல் அறிமுகமாகும் vivo x70 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் - சிறப்பம்சங்கள் என்ன?

போகோ மற்றும் விவோ நிறுவனங்கள்செப்டம்பர் 30-ல் தங்கள் புதிய ஸ்மார்ட் போன் டிவைஸ்களை அறிமுகப்படுத்துகின்றன. இறுதியாக அக்டோபர் 1 அன்று மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனை வெளிப்படுத்த உள்ளது. சாம்சங் நிறுவனம் தனது Galaxy F42-வை செப்டம்பர் 28 வெளியிட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போவை பொறுத்த வரை Oppo A55 மற்றும் Oppo F19s வெளியாகலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விவோ தனது புதிய மாடல்களான் X70 சீரிஸை இந்தியாவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறத. போகோ நிறுவனம் சமீபத்தில் உலகளவில் வெளியிட்ட Poco X3 GT ஸ்மார்ட் போனை Big Billion Days நெருங்கும் இந்த நேரத்தில் வெளியிட கூடும். கடைசியாக அக்டோபர் 1 அன்று வெளியாக இருக்கும் மோட்டோரோலா டிவைஸ் பற்றி இதுவரை ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: