எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடி- ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டேஸ்’..!

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மட்டும் 90 சதவிகிதம் வரையில் கூட தள்ளுபடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: September 13, 2019, 1:58 PM IST
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடி- ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டேஸ்’..!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: September 13, 2019, 1:58 PM IST
ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘பிக் பில்லியன் டேஸ்’ என்னும் விழாக்கால விற்பனைச் சலுகை வருகிற செப்டம்பர் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்டின் இந்த விழாக்கால தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு இந்த சலுகை நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக செப்டம்பர் 28-ம் தேதி இரவு 8 மணிக்கே தொடங்கிவிடும். இந்த ஆறு நாட்களுக்கான விற்பனைத் திருவிழாவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான சலுகை இருக்குமென கூறப்படுகிறது.

இந்த விற்பனைக் காலத்தில் ஃப்ளிப்கார்ட், ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதனால், ஆக்சிஸ் வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு, ஐசிஐசிஐ வங்கியின் க்ரெடிட் கார்டு மட்டும் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும்.முதல் நாள் விற்பனையில் டிவி, வீட்டு உபயோக சாதனங்கள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சாதனங்கள் ஆகியவற்றுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் இருக்கும்.


செப்டம்பர் 30-ம் தேதி ஸ்மார்ட்போன், டேப்லெட், கேட்ஜெட்ஸ் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சிறப்புத் தள்ளுபடிகள் இடம்பெற்றிருக்கும். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மட்டும் 90 சதவிகிதம் வரையில் கூட தள்ளுபடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!

கிருஷ்ணகிரியில் விலங்குகள் இல்லாத சர்க்கஸ் நிகழ்ச்சி!

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...