வீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்... இலவச சேவைக்கு வரவேற்பு கிடைக்குமா...?

"இச்சேவையைப் பெற ஃப்ளிப்கார்ட் பயனாளர்கள் தங்களது ஆப் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்"

வீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்... இலவச சேவைக்கு வரவேற்பு கிடைக்குமா...?
ஃப்ளிப்கார்ட்
  • News18
  • Last Updated: August 19, 2019, 11:30 AM IST
  • Share this:
இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃப்ளிப்கார்ட் தனது ஆப் பயனாளர்களுக்காக இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்கியுள்ளது.

வீடியோ ஸ்ட்ரீமிங் செய்ய தனி ஆப் ஒன்றை அறிமுகம் செய்யாமல், விற்பனை ஆப் மூலமாகவே வீடியோ சேவையையும் ஃப்ளிப்கார்ட் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஃப்ளிப்கார்டின் 160 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயனடைய உள்ளனர். வீடியோ சேவையைப் பொறுத்தவரையில் சந்தா செலுத்தி பார்க்கக்கூடிய அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் என கடுமையான போட்டி நிலவுகிறது.

ஆனால், பயனாளர்கள் எந்தவிதமான வீடியோக்களை எதிர்பார்க்கலாம் என இதுவரையில் ஃப்ளிப்கார்ட் தெளிவுபடுத்தவில்லை. கடந்த வாரம் வீடியோ சேவை குறித்துஃப்ளிப்கார்ட் அறிமுகம் செய்தபோது சிறிது காலத்துக்கு ஃப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ் என எதுவும் வெளிவராது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இச்சேவையைப் பெற ஃப்ளிப்கார்ட் பயனாளர்கள் தங்களது ஆப் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். அப்டேட் ஆன ஃப்ளிப்கார்ட் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இடம்பெற்றுள்ளது.

மேலும் பார்க்க: சென்னையில் குற்றத்தை குறைத்த மூன்றாவது கண்!
First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்