யுபிஐ பணப்பரிவர்த்தனை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

UPI

யுபிஐ வசதி மூலம் யூசர்கள் தங்கள் மொபைல் சாதனத்தில் இருந்து ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் உடனடி பண பரிமாற்றம் செய்யலாம். அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் UPI வசதி கிடைக்கிறது.

  • Share this:
யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது ஒரு தேசிய கட்டணக் கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறையாகும். NPCI என்பது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமாகும். யுபிஐ அடிப்படையில் IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது இரு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணத்தை ட்ரான்ஸ்பர் செய்ய அனுமதிக்கிறது.

இது "பியர் டு பியர்" சேகரிப்பு கோரிக்கையையும் பூர்த்தி செய்கிறது. எனவே தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப திட்டமிடப்பட்டு பணம் செலுத்தப்படலாம். மேலும் இந்த வசதி மூலம் யூசர்கள் தங்கள் மொபைல் சாதனத்தில் இருந்து ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் உடனடி பண பரிமாற்றம் செய்யலாம். அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் UPI வசதி கிடைக்கிறது. இருப்பினும், யுபிஐ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 மிக முக்கியமான விஷயங்கள் பற்றி பாப்போம்.

1. UPI நிதி பரிமாற்றத்திற்கு வாடிக்கையாளர் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

UPI பணப் பரிமாற்றத்திற்கு ஒருவர் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களையோ அல்லது வால்ட் விவரங்களையோ இணைக்க முடியாது. இந்த பரிமாற்றத்தில் வங்கி கணக்குகளை மட்டுமே சேர்க்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

2. UPI நிதி பரிமாற்றத்திற்கான வெவ்வேறு சேனல்கள் யாவை?

i. விர்ச்சுவல் ஐடி மூலம் நிதி அனுப்புதல் / பெறுதல் விருப்பம்.

ii. வங்கி கணக்கு எண் மற்றும் IFSC பயன்படுத்தி நிதி பரிமாற்றம்.

iii. ஆதார் எண் மூலம் நிதி பரிமாற்றம் ஆகியவை அடங்கும்.

3. இந்தியாவில் UPI சேவை வழங்கும் மிகவும் பிரபலமான ஆப்கள் யாவை?

போன்பே (PhonePe)
பேடிஎம் (Paytm)
பிஎம்ஐஎம் ஆப் (BHIM App)
மொபிக்விக் (Mobikwik)
கூகிள் தேஸ் (Google Tez)
உபெர் (Uber)
பேடிஎம் கொடுப்பனவு வங்கி (Paytm Payments Bank)
எஸ்பிஐ பே (SBI Pay)
ஆக்சிஸ் பே (Axis Pay)
பிஓபி யுபிஐ (BOB UPI) ஆகியவை ஆகும்.

4. யுபிஐ IMPS-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

UPI பின்வரும் வழிகளில் IMPS-க்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது:

1. P2P முழு செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது.
2. வணிகர் பேமென்ட்டுகளை எளிதாக்குகிறது.
3. பண பரிமாற்றத்திற்கான ஒற்றை APP-ஆக செயல்படுகிறது.
4. இரண்டு காரணி அங்கீகாரத்தைக் பெற சிங்கிள் கிளிக் செய்தால் போதும்

5. UPI பயன்படுத்தி எவ்வளவு நிதியை பரிமாறலாம்? வரம்பு என்ன?

தற்போது, யுபிஐ பரிவர்த்தனைக்கு அதிகபட்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: