ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஃபேஸ்புக்கை பல ஆண்டுகளாக நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த 5 விஷயங்களை தவற விட வேண்டாம்

ஃபேஸ்புக்கை பல ஆண்டுகளாக நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த 5 விஷயங்களை தவற விட வேண்டாம்

பேஸ்புக்

பேஸ்புக்

நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் மொபைல் ஆப்பில் இருந்து லாகின் செய்து இருக்கிறீர்களா அல்லது பிரௌசரிலிருந்து லாகின் செய்திருக்கிறீர்களா என்ற விவரத்தை settings இல் சென்று பார்க்க முடியும்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமூக வலை தளங்களில் மிகவும் முக்கியமானது ஃபேஸ்புக்! நண்பர்களால் தொடங்கப்பட்ட நண்பர்களை இணைக்கக்கூடிய ஒரு தளம் தான் ஃபேஸ்புக்! ஆனால், பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது மற்றும் 18 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருக்கும் 2k கிட்ஸ் என்று கூறப்படும் இளைஞர்களுக்கு ஃபேஸ்புக் கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றினாலுமே, மாதம் 30 கோடிக்கும் மேற்பட்ட ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்கள்!

  ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லாமல், வணிகம், மார்கெட்டிங், கல்வி என்று பலதரப்பட்ட மக்களும் பயனுள்ளதாக இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பாதுகாப்பாக இயங்குவதற்கு, உங்களுடைய டேட்டாவை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  ஃபேஸ்புக்கில் யார் உங்கள் பதிவுகளைப் பார்க்கலாம் என்பதை கட்டுப்படுத்துங்கள்

  பேஸ்புக்கில் யாருடன் நட்பில் இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. தெரிந்தவர், தெரியாதவர் என்று பலரும் ஃபேஸ்புக்கில் உங்கள் கணக்கிற்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கலாம். நீங்கள் நட்பில் இணைத்துக்கொண்டாலும், உங்களுடைய பதிவுகளை யார் பார்க்கலாம் மற்றும் யார் பார்க்கக்கூடாது என்பதை கட்டுப்படுத்தும் ஆப்ஷன் உங்களுக்கு இருக்கிறது. பொதுவாக நீங்கள் எழுதும் பதிவுகளை உங்கள் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் மட்டும் பார்ப்பதற்கு Friends என்ற விருபத்தைத் தேர்வு செய்யலாம். அல்லது உங்கள் கணக்கில் உங்களுடன் நட்புப் பட்டியலில் இல்லாதவர்கள் கூட உங்கள் பதிவுகளை பார்ப்பதற்கு Public என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்லாமல் உங்கள் நட்பில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர்ப்பதற்கு, Custom என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.

  உங்கள் கணக்கை லாக் செய்து கொள்ளுங்கள்

  நீங்கள் பேஸ்புக்கில் ஆக்டிவாக செயல்பட்டாலும் அல்லது அவ்வப்போது நீங்கள் பதிவுகளை அல்லது கமெண்ட் செய்தாலுமே, உங்கள் செயல்பாடுகள் மற்றும் உங்களைப் பற்றியே பல விதமான தகவல்களும் ஃபேஸ்புக் தளத்தில் மற்றவர்களால் பார்க்க முடியும். எனவே, இது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம், உங்களைப் பற்றிய தகவல்கள் கூட பிரைவேட்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுடைய புரொஃபைலை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்.

  யார் உங்களுக்கு ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் குடுக்கலாம் என்பதைத் தீர்மானியுங்கள்

  பொதுவாகவே யாரிடம் இருந்து நட்பு அழைப்பு வருகிறது, யாரை நீங்கள் நட்பு பட்டியலில் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. முன்பின் தெரியாத பல நபர்களிடம் இருந்து உங்களுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பவதை நீங்கள் கட்டுப்படுத்தும் ஆப்ஷன் இருக்கிறது.

  உங்கள் நண்பர்களுடைய நண்பர்கள், அதாவது மியூச்சுவல் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பலாம். உங்கள் நட்புப் பட்டியலில் இருப்பவர்களை யார் பார்க்கலாம் என்ற விருப்பமும் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை வைத்து யார் உங்களை கண்டுபிடிக்க முடியும் என்ற விருப்பத்தை மாற்றி அமைக்கலாம்.

  Also Read : ஆஹா.. சூப்பர்! வாட்ஸ் அப்பில் ஓட்டுப்போடும் புதிய வசதி

  இந்த விருப்பங்களை எல்லாம் நீங்கள் பிரைவேட்டாக மாற்றினால், உங்கள் கணக்கு மற்றும் டேட்டா பாதுகாப்பாக இருக்கும். அறிமுகம் ஆகாத நபர்களிடம் இருந்து விலகி இருக்கலாம்.

  நீங்கள் எந்த இடங்களில் இருந்து லாகின் செய்துள்ளீர்கள் என்று பாருங்கள்

  நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் மொபைல் ஆப்பில் இருந்து லாகின் செய்து இருக்கிறீர்களா அல்லது பிரௌசரிலிருந்து லாகின் செய்திருக்கிறீர்களா என்ற விவரத்தை settings இல் சென்று பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் எத்தனை இடத்தில், எந்த நேரத்தில் எந்த லோகேஷனில் லாகின் செய்துள்ளீர்கள் என்ற விவரமும் அதில் காட்டப்படும். நீங்கள் வேறு நபரின் மொபைல் அல்லது லேப்டாப்பில் நீங்கள் லாகின் செய்து லாக்-அவுட் செய்ய மறந்து இருந்தால் உங்கள் மொபைல் ஆப்பிலிருந்தே அந்த சாதனத்தில் இருந்து நீங்கள் லாக்-அவுட் செய்ய முடியும்.

  ஃபேஸ்புக் தரவை அக்சஸ் செய்யும் செயலிகளை ப்ளாக் செய்யுங்கள்

  பல்வேறு செயலிகளில் லாகின் செய்யும் பொழுது, ஜிமெயில் லாகின் அல்லது ஃபேஸ்புக் லாகின் என்ற விருப்பங்களை உங்களுக்குக் கேட்கும். அவ்வாறு நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தி லாகின் செய்யும் பொழுது, உங்களுடைய அடிப்படை விவரங்கள், நட்புப்பட்டியல், புகைப்படங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் அந்த குறிப்பிட்ட செயலியால் அக்சஸ் செய்யப்படும். ஒரு வேளை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அனுமதி கொடுத்துவிட்டால், அந்த செயலிகள் பாதுகாப்பற்றவையாக உணர்ந்தால், உடனடியாக பிளாக் செய்து விடுங்கள்.

  மேலே கூறியவை அனைத்தையுமே உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் Settings & privacy பிரிவில் சென்று பிரைவசியை மாற்றிக் கொள்ளலாம்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Facebook