• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நிறைய நேரம் சார்ஜ் இருக்கக் கூடிய பேட்டரி வசதி கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்!

நிறைய நேரம் சார்ஜ் இருக்கக் கூடிய பேட்டரி வசதி கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள்

நீங்கள் கேம் பிரியர் என்றால் உங்களுக்கு ஏற்ற தரமான ஸ்மார்ட்போன் இந்த போக்கோ F3 GT 5G. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 SoC, 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வசதி தரப்பட்டுள்ளது.

  • Share this:
உங்களுடைய பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டுமென்று பல நாட்களாக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கென்றே சிறப்பான 5 ஸ்மார்ட்போன்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மிக விரைவிலே சார்ஜிங் செய்ய கூடிய வசதியும், அதிக நேரம் சார்ஜ் நிற்க கூடிய வசதியும் கொண்ட 30,000 ரூபாயிற்கு கீழுள்ள ஸ்மார்ட்போன்களை பலர் தேடி வந்திருப்பீர்கள். இவை அனைத்திலும் சிறந்த செயல்திறனும் உள்ளது. இந்த 5 ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.,

ஜியோமி Mi 11X 5G :

சிறந்த பேட்டரி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த ஜியோமி Mi 11X 5G, 4,520mAh பேட்டரி வசதியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. மேலும் இதில் 6.67 இன்ச் முழு HD+ E4 AMOLED டிஸ்பிளே, 120Hz ரிஃபிரஷ் ரேட், 360Hz டச் சேம்பிளிங் ரேட் தரப்பட்டுள்ளது. சிறந்த செயல்திறனுக்கு குவால்காம் ஸ்நாப்டிராகன் 870 SoC, ட்ரிப்பில் ரியர் கேமிரா செட் அப் உடன் கொண்ட 48 மெகா பிக்சல் பிரைமரி கேமிராவும் உள்ளது. ஜியோமி பிரியர்களுக்கு நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் பிடிக்கும். ரூ.29,999-இல் இருந்து இதன் விலை தொடங்குகிறது

ஒன்பிளஸ் நார்ட்டு 2 5G :

ஒன்பிளஸ் மொபைல் பிரியர்கள் தங்களின் பட்ஜெட்டில் வாங்க கூடிய ஒரு மொபைல் தான் இந்த ஒன்பிளஸ் நார்ட்டு 2 5G. இதன் ஆரம்ப விலை ரூ.29,999 ஆகும். இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 SoC, 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே, 90Hz ரிஃபிரஷ் ரேட், 50 மெகா பிக்சல் பிரைமரி ஷூட்டர் ஆகிய சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் 4500mAh டூயல் செல் பேட்டரி சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வெறும் 30 நிமிடத்தில் இந்த ஸ்மார்ட்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.

போக்கோ F3 GT 5G :

நீங்கள் கேம் பிரியர் என்றால் உங்களுக்கு ஏற்ற தரமான ஸ்மார்ட்போன் இந்த போக்கோ F3 GT 5G. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 SoC, 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வசதி தரப்பட்டுள்ளது. சிறந்த அனுபவத்திற்கு 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே, 120Hz ரிஃபிரஷ் ரேட், 480Hz டச் சேம்பிளிங் ரேட்டுடன் இது வருகிறது. மேலும் அதிக நேரம் சார்ஜ் நிற்பதற்கு 5,065mAh பேட்டரி பேக் அப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.28,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 64MP ட்ரிப்பில் ரியர் கேமரா செட் அப் வழங்கப்பட்டுள்ளது.

Also read... இந்தியாவில் 5-வது ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷனை துவக்கிய அமேசான்!

ரியல்மீ X7 Max 5G :

இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் முழு HD+ (2400×1080 pixels) sAMOLED டிஸ்பிளே, 120Hz ரிஃபிரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்பிளிங் ரேட் ஆகிய வசதிகள் உள்ளன. நல்ல சார்ஜிங் அனுபவத்தை பெற இதில் 4,500mAh பேட்டரி வசதியும், 50W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டும் தரப்பட்டுள்ளது. மேலும் இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 SoC, 64MP பிரைமரி கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 26,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் கேலக்சி M52 5G :

இந்த புதிய சாம்சங் கேலக்சி M52 5G ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 778 SoC சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.24,999 ஆகும். இதில் 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளே, ட்ரிப்பில் கேமிரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி பேக் அப் ஆகிய வசதிகள் உள்ளன. சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: