வலியை உணரும் வகையிலான ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்...!

வலியை உணரும் வகையிலான ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்...!
  • News18
  • Last Updated: February 27, 2020, 1:18 PM IST
  • Share this:
ஜப்பானைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் வலியை உணரும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பேராசிரியர் மினொரு அசாடா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இதனை சாதித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களுடன் இணைந்து வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

ஒரு சிறுவனின் தோற்றத்தில் மனிதனின் தலை போன்றே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் மனிதனின் உணர்ச்சிகளை இந்த ரோபோ உணரும் என்பது தொழில்நுட்ப உலகில் ஒரு பெரும் பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது.
அபெட்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ வலிகளை உணரும் வகையிலான முக பாவனைகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள பேராசிரியர் மினொரு அசாடா இதுகுறித்து கூறும் போது,’ இந்த ரோபோவில் மெல்லிய தொடுதலையும், வேகமான ஒரு அடியையும் உணரும் வகையிலான ஒரு மென்பொருள் உள்ளீடாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் அதை உணரும் போது ரோபோ அதற்கேற்றவாறு முக பாவனைகளை வெளிப்படுத்தும் என்றும்’ என தெரிவித்தார்.

வயதான நபர்களுக்கு அவர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading