• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஓப்போ ரெனோவின் முதல் அபிப்ராயங்கள்: போட்டியை எதிர்நோக்கி விரைந்து செல்லுதல்

ஓப்போ ரெனோவின் முதல் அபிப்ராயங்கள்: போட்டியை எதிர்நோக்கி விரைந்து செல்லுதல்

ஓப்போ ரெனோ

ஓப்போ ரெனோ

இதன் எளிமை மற்றும் நுட்பத்தின் சமநிலை, நடுத்தர விலையுடைய திறன்பேசி சந்தையில் முதல் தரத்திற்கான தகுதி வாய்ந்த  போட்டியாளராக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
 தன் பெரிய மற்றும் கவனத்தை கவரும் டிஸ்ப்ளே, தெளிவான சிறிய தோற்றம், பெரிய பேட்டரி மற்றும் நவீன தரத்திலான 10x ஹைப்ரிட் ஸூம் கேமரா திறன்களுடன், ஒப்போ ரெனோ 10x ஸூம் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்றியுள்ளது.

 உலகளவில் முன்னணியில் இருக்கும் திறன்பேசி பிராண்ட் ஒப்போவின் சமீபத்திய வெளியீடு, ரெனோ  10x ஜூம் உலகளவில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தி, புகைப்படம் மற்றும் கைப்பேசி பொழுதுபோக்கை பெரும் உச்சத்துக்கு கொண்டு போக தயாராக உள்ளது. இந்த திறன்பேசியில் 10x கலப்பின ஜூம் தொழில்நுட்பம் மற்றும் உலகின் முதல் பெரிஸ்கோப்(மறைநோக்கி) டெலிஃபோட்டோ லென்ஸ் (தொலைப்பட வில்லை) ஆகியவை உள்ளது, இது அழகாக வடிவமைக்கப்பட்ட தொகுப்பில் கட்சிதமாக செருகப்பட்டுள்ளது.

திறன்பேசி துறையில் எல்லோருடைய மனதையும் கவர்ந்து, திருப்புமுனையாக அமைந்து, ஒப்போ ரெனோ 10x ஜூம் ஏற்கனவே உலகம் முழுவதும் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்தியாவில், புதிய, கச்சிதமான, இன்னும் துடிப்பாக வடிவமைக்கப்பட்ட ரெனோ 10x ஜூம் பிரீமியம் திறன்பேசி பிரிவில் இருக்கும் போட்டியாளர்களை வீழ்த்தி, அரியணையில் இருந்து இறங்கியுள்ளது.புகைப்பட சீராக்கத்தின் வெற்றி

10x கலப்பின ஜூம் நிலையான ஒப்போவின் புதிய தயாரிப்பு வெற்றி பெற்ற அம்சத்தின் பாதையாகும். பின்னால் இருக்கும்  முக்கிய கேமரா தொகுதிகளில் மூன்று லென்ஸ்கள் (ஒளிவில்லைகள்) உள்ளன. முதன்மை கேமரா என்பது OIS மற்றும் PDAF உடன் 48 மெகாபிக்சல் IMX586 f / 1.7 சென்சார் ஆகும். 13 மெகாபிக்சல் உடைய பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (மறைநோக்கி தொலைப்பட ஒளிவில்லைகள்) பயனர்கள் 10x கலப்பின ஜூம் மற்றும் 60x டிஜிட்டல் ஜூம் புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. இறுதியாக, 8 மெகாபிக்சல் மிகவும் அகலக் கோணம் உடைய கேமரா முழுமையான மும்மடங்கு-கேமரா அமைப்பை உருவாக்குகிறது.

ரெனோ 10x ஜூம் 16-160 மிமீ முழு குவியத் தொலைவையும் உள்ளடக்குவதற்கு பல்வேறு குவியத்திலான எல்லைகள் மீது மூன்று ஒளிவில்லைகளையும் ஒருங்கிணைக்கிறது. நுட்பமாகவும், பெரிதாகவும் படங்களை எடுப்பதற்கும் மேலாக, இந்த திறன்பேசியானது மிகவும் குறைந்த வெளிச்சத்திலும் அசத்தலான புகைப்படங்களை எடுக்கிறது. அல்ட்ரா நைட் (மிகவும் இருட்டில் பயன்படுத்தும்) பயன்முறை 2.0 - விற்கு நன்றி. தொழில்நுட்பத்துடன் புகைப்படங்களை வழங்குவதோடு, இதன் செயற்கை நுண்ணறிவு உருவப்பட உகப்பாக்கம் உட்பொருள் மற்றும் பின்னணி ஆகியவற்றை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது, மேலும் அதே சமயம் நிறத்தின் திண்மையையும் அதே மாதிரியாக இருப்பதை உறுதி செய்கிறது.

தேர்வு செய்யக்கூடிய 5 ஸ்டைலான அமைப்புகளுடன், இந்த திறன்பேசியானது தொழில்நுட்பத்துடன் உருவப்பட புகைப்படங்களை மிகவும் எளிதாக படம் பிடிக்கிறது. டாஜில் (குழப்பு) நிற பயன்முறையானது நிஜ வாழ்வில் இருக்கும் நிறங்களுக்காக பிக்சல் அளவிலான நிற மீட்பு முறையை பயன்படுத்துகிறது.

இந்த தொலைபேசியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று சுறாமீனின் துடுப்பு போன்று சுழலும் முன்பக்க கேமரா. இது 0.8 வினாடிகளில் மேல் விளிம்பில் இருந்து சுழலும் நன்கு வடிவமைக்கப்பட்ட 16 மெகாபிக்சல் கேமரா ஆகும். இந்த கேமராவானது பக்கவாட்டில் இருந்து 11 டிகிரி கோணத்தில் உயரும், இது செல்ஃபி எடுப்பதற்கான மிகவும் பொருத்தமான கோணமாக கருதப்படுகிறது.

பெட்டியில் என்ன உள்ளது?

தற்போது, ஒப்போ ரெனோ 10x ஜூம் இந்தியாவில் ஜெட் பிளாக் மற்றும் ஆசிய பசுமை நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ 39,990 ஆகும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரோம் உடைய மாடலின் விலை ரூ .49,990. இந்தியாவில் இந்த சாதனத்தின் முதல் விற்பனை தேதி ஜூன் 7 ஆகும்.

 தோற்றம் குறித்த சோதனை

தொடும்போது மென்மையான உணர்வு மற்றும் மெல்லிய நிழலுருவம் ஆகியவற்றுக்காக  3D வளைவான கண்ணாடிகளில் உறையிடப்பட்ட இந்த ரெனோ 10x ஜூம் பின்புற உறையில் கேமரா பறிப்புடன் வருகிறது. இந்த திறன்பேசியின் சிறப்பம்சம் அதன் குறைவாக உளிச்சாயும் காட்சித்திரை மற்றும் சுறா மீனின் துடுப்பு போன்று உயரமாக சுழலும் அதன் முன் பக்க கேமரா ஆகும். காட்சி திரைக்கு மேலே சிறிய துளையில் இருக்கும் செவிப்பொறி மற்றும் ஒலிபெருக்கியானது சாதனத்தின் ஒலிப்பெருக்கி ஒலியாக செயல்படுகிறது.

ரெனோ 10x ஜூம்திறன்பேசி  6.6 அங்குல FHD + காட்சித்திரை, மோல்ட் செய்யப்பட்ட பேனல்கள் ஆகியவற்றை வழங்கி, உள்-காட்சித்திரை  கைரேகை சென்சார்களை ஆதரிக்கிறது, மேலும் நீடித்து உழைக்கும், கீறல்களை தடுக்கக்கூடிய கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 என்பவற்றால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு

உயர் தரமான குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 செயலி மற்றும் 8 ஜிபி ரேம் உடன், ரெனோ 10x ஜூம் 4 வது தலைமுறை செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை ஒருங்கிணைக்கிறது. 4,065 mAh பேட்டரி ஒரு நாளைக்கு போதுமான ஆற்றலை வழங்குகிறது, மேலும் சீக்கிரம் சார்ஜ் ஆவதற்கு ஒப்போவின் விஒஒசி 3.0 என்பவற்றை இந்த திறன்பேசி ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு 9 - இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டு ColorOS 6 உடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு தொடர்பாக

இத்தகைய மகிழ்ச்சிகரமான சேவைகளை வழங்குவதோடு, இந்த சாதனம் விளையாட்டாளர்களையும் திருப்திப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திறன்பேசியில் அமைப்பு முறை உகப்பாக்க தீர்வு மற்றும் மிகையூட்டப்பட்ட வேகத்தை கொண்டுள்ளது. ஒப்போ மூலம் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட இந்த தீர்வில் மூன்று தொகுதிகள் உள்ளன: விளையாட்டு வேகம், கணினி வேகம், மற்றும் பயன்பாட்டி வேகம். இவை விளையாட்டு அனுபவம், அமைப்பின் வேகம், மற்றும் பயன்பாட்டி திறப்பு வேகத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளை வழங்குகிறது.

இந்த வகைகள் விளையாட்டுகளுக்காக டியூவி ரெயின்லாந்தின் உயர்-செயல்திறன் சான்றிதழைப் பெறுவதற்காக உலகின் முதல் கைப்பேசியாக இருப்பதன் பெருமையை கொண்டுள்ளது.

கூடுதலாக, ரெனோ 10x ஜூம் திறம்பட திறன்பேசியின் வெப்பநிலையை நிர்வகிக்கவும், அதிகம் வெப்பமடைவதை எதிர்க்கவும் வெப்ப ஜெல், வென்கரி தாள், செப்பு குழாய் திரவ குளிர்ச்சி மற்றும் மூன்று-குளிராக்கல் கட்டுப்பாடு ஆகியவற்றின் கலவைகளை பயன்படுத்துகிறது.

ஆரம்ப தீர்ப்பு

ஒப்போ ரெனோ 10x ஜூம் அதன் முதன்மை தலைப்புக்கு தகுதியுடையது. நன்கு வடிவமைக்கப்பட்டு, நன்கு தயாரிக்கப்பட்டு மற்றும் நல்ல விலையுடன் இது ஒரு நல்ல தொகுப்பாக இருக்கிறது. இதன் எளிமை மற்றும் நுட்பத்தின் சமநிலை, நடுத்தர விலையுடைய திறன்பேசி சந்தையில் முதல் தரத்திற்கான தகுதி வாய்ந்த  போட்டியாளராக உள்ளது. இதன் மூன்று-கேமரா அமைப்பு மற்றும் விலை புள்ளிகள், ஒப்போ ரெனோ 10x ஜூம் திறன்பேசியை நாகரிகத்தை முன்னோக்கிய, வெட்டு-விளிம்பு, தொழில்நுட்ப ஆர்வலராக இருக்கும் தலைமுறையினருக்கு கட்டாய தெரிவாக ஆக்குகிறது.

மேலும் பார்க்க: கூகுள் மேப் மூலமே ரயில், பேருந்து அட்டவணையைத் தெரிந்துகொள்ளலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: