2021-ல் மனிதர்களுடன் விண்ணில் பாய்கிறது விண்கலம் - இஸ்ரோ தலைவர் சிவன்

மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய திருப்புமுணையாக அமையும் எனவும் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.

2021-ல் மனிதர்களுடன் விண்ணில் பாய்கிறது விண்கலம் - இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
  • Share this:
மனிதர்களை சுமந்து செல்லும் ககன்யான் விண்கலத்தை வரும் 2021ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கடந்த 2018ஆம் ஆண்டு 17 விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக கூறினார். இந்த ஆண்டில் 31 விண்கலங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை தவிர இரண்டு ஆளில்லா விண்கலங்களை அடுத்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதங்களில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக சிவன் கூறினார்.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு இறுதியில் மனிதர்களை சுமந்து செல்லும் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 10600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் விண்கலத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த விண்கலம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய திருப்புமுணையாக அமையும் எனவும் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.


Also Watch:
First published: January 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்