• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணம் - நாசா அறிவிப்பு

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணம் - நாசா அறிவிப்பு

விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது விண்வெளி நடைபயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது விண்வெளி நடைபயணம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என நாசா அறிவித்துள்ளது.

பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைபயண நிகழ்வுக்கு மார்ச் மாதத்தில் நாசா ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக கிறிஸ்டினா கோச், அன்னே மெக்லைன் ஆகிய இரு விண்வெளி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் விண்வெளியில் பயன்படுத்தும் மின்கல ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நாசா ரத்து செய்தது.

இந்நிலையில், வருகிற 21-ம் தேதி பெண்களின் விண்வெளி நடைபயணம் நடைபெறும் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது விண்வெளி நடைபயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: