2019-ல் வெளியாகும் 5G ஸ்மார்ட்போன்! துரிதப் பணியில் OnePlus

முதல் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட OnePlus தயாராகி வருகிறது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 6:38 PM IST
2019-ல் வெளியாகும் 5G ஸ்மார்ட்போன்! துரிதப் பணியில் OnePlus
முதல் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட OnePlus தயாராகி வருகிறது.
Web Desk | news18
Updated: December 6, 2018, 6:38 PM IST
உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் 2019-ன் தொடக்கத்திலேயே வெளியிட OnePlus தயாராகி வருகிறது.

5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதலாவதாகக் களம் இறங்கியுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். சீன நிறுவனமான ஒன்ப்ளஸ் 2019-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன் முதல் விற்பனை இங்கிலாந்தில் இருந்து தொடங்கும் என ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பீட் லா ஹவாய் தீவில் நடந்த டெக் உச்சி மாநாட்டில் கூறியதாவது, “5ஜி ஸ்மார்ட்போன் தனது திறன் மற்றும் செயல்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும். 2019-ம் ஆண்டில் மே மாதத்துக்குள் ஒன்ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்றார்.

இதற்கு முன்னதாக 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் விற்பனை குறித்து முதலில் அறிவித்த நிறுவனமாக ஒன்ப்ளஸ் உள்ளது. இதையடுத்து விரைவில் தனது 5ஜி ஸ்மார்ட்போனை சாம்சங் வெளியிடும் என டெக் உலகம் எதிர்பார்க்கிறது.

மேலும் பார்க்க: பெரும்பாக்கம் ஏரியில் கலக்கப்படும் கழிவுநீர்
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...