ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிபா கால்பந்து: நம்பர் 1 இடத்தை தட்டித் தூக்கிய ஜியோ சினிமா!

பிபா கால்பந்து: நம்பர் 1 இடத்தை தட்டித் தூக்கிய ஜியோ சினிமா!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜியோ சினிமா இதுவரை 64 புட்பால் போட்டிகளை ஆங்கிலம், இந்தி, தமிழ் மலையாளம் மற்றம் பெங்காலி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான மொழிகளில் ஒளிபரப்பி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் தொலைதொடர்பு ஜாம்பவான் ரிலையன்ஸ் நிறுவனம். இன்று 90விழுக்காடு பொதுமக்கள் கையில் செல்போன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ரிலையனஸ் தான். அப்படி இந்தியாவில் ஒரு பெரிய தொலைத் தொடர்பு புரட்சி நடத்தியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். மிக நீண்ட தொலைநோக்கு திட்டத்தோடு இந்தியாவில் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம். அதன் நீட்சி தான் ரிலையன்சின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனம்.

ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகச் சிறந்த செல்போன் சேவை வழங்கும் நிறுவனமாக உருமாறியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்கும் முனைப்பில் இருக்கும் ஜியோ நிறுவனம் வெற்றிகரமாக ஜியோ சினிமா என்ற மொபைல் செயலியையும் நடத்தி வருகிறது. தரமான நிகழ்ச்சிகளை துல்லியமான பார்வைத் தரத்தோடு ஜியோ சினிமா ஆப் வழங்குவதால் ரசிகர்கள் மத்தியில் ஜியோ சினிமா ஆப் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலக கோப்பை புட்பால் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி பெற்றுள்ளது.

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா இரண்டுமே ரிலையன்சின் துணை நிறுவனங்கள் என்பதால் ஜியோ சினிமா ஆப்பிலும் உலக கோப்பை புட்பால் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. ஏற்கனவே ஜியோ சினிமா செயலியை டவுன்லோட் செய்திருந்தவர்கள் புட்பால் போட்டிகளை கண்டு ரசித்து வந்தனர். தரமான, துல்லியமான தரத்துடன் போட்டிகளை கண்டு ரசித்தனர். ஜியோ சினிமா செயலியில் அனைத்துப் போட்டிளும் மிக நேர்த்தியாக ஒளிபரப்பப்பட்டது.

Read More : 5ஜி மூலம் மருத்துவத்துறையில் நவீன சேவைகள் - ஜியோ நிறுவனம் புதிய திட்டம்

கோல்கள் பற்றிய விபரம், அணிகளின் பலம், பலவீனம், போட்டிகளின் பலகோண காட்சிகள், ரீ பிளே, தரமான ஸ்கோர் விபரங்கள் என அனைத்தும் துல்லியமாக ஒளிபரப்பப்பட்டதால் மேலும் பலரும் ஜியோ சினிமா ஆப்பை விரும்பி டவுண்லோட் செய்யத் தொடங்கினர். இதனால் தற்போது ஜியோ சினிமா செயலி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.செயலிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஆப் ஆனியின் தரவுகளின் படி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட பொழுதுபோக்கு செயலிகளில் ஜியோ சினமா ஆப் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜியோ, வோடபோன், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட் தொலைதொடர்பு சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் இந்த ஜியோ சினிமா ஆப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பரவலாக அனைத்து சேவைகளிவுலும் அதிகமாக ஜியோ சினிமா ஆப் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நவம்பர் மாத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட பொழுதுபோக்கு செயலிகளின் எண்ணிக்கையில் ஜியோ சினிமா ஆப் மட்டும் 29 விழுக்காடு ஆகும். அதோடு, ஜியோ சினிமா ஆப் அனைத்து வரையறைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் செயலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ சினிமா இதுவரை 64 புட்பால் போட்டிகளை ஆங்கிலம், இந்தி, தமிழ் மலையாளம் மற்றம் பெங்காலி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான மொழிகளில் ஒளிபரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: FIFA, Jio, Reliance, Technology