ஃபிஃபா 2018 போட்டிகளில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்

news18
Updated: July 16, 2018, 9:49 AM IST
ஃபிஃபா 2018 போட்டிகளில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்
கோப்பு படம்
news18
Updated: July 16, 2018, 9:49 AM IST
கால்பந்து விளையாட்ட பொறுத்தவரைக்கும் ஆடுகளத்துல நடுவர் மட்டும்தாந் வீரர்களோட செயல்பாட்டை கண்காணிக்கிறதா பலரும் நெனச்சுட்டு இருக்காங்க.. ஆனா கண்ணுக்குத் தெரியாத பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலமாக வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்... 

VAR, GLT மற்றும் EPTS என மூன்று தொழில்நுட்பங்கள் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முக்கிய இடம் பிடித்துள்ளன. VAR எனப்படும் VIDEO ASSIST REFREE கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் DRS முறையைப் போன்றது. போட்டியின் போது வீரர் கால் இடறி கீழே விழ்கிறாரா அல்லது எதிரணி வீரர் தள்ளிவிட்டு கீழே விழுகிறாரா என்பதை தெரிந்துகொள்ள இந்த முறை பயன்படுத்தப்பட்டது. வீரர் கீழே விழும் போது சக வீரர்கள் கள நடுவரிடம் முறையிடும் பட்சத்தில் அவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடுவார் அல்லது தாமே எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று பதிவான காட்சிகளை ஆராய்வார். தவறு நடந்தது தெரிந்தால் பாதிக்கப்பட்ட அணிக்கு ஃபீரி கிக் அல்லது பெனால்டி வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்தது GLT  எனப்படும்  GOAL LINE TECHNOLOGY. சில நேரங்களில் பந்து கோல்வலையை தொடுவதற்கு சில மைக்ரோ மீட்டர் தொலைவு இருக்கும் போது கீப்பரால் தடுத்து நிறுத்தப்படும். அதுபோன்ற காலங்களில் அது கோலா இல்லையா என்பதை உறுதி செய்ய இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது 7 எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டு இது கண்காணிக்கப்படுகிறது.

EPTS என்பது ELECTRONIC PERFORMANCE AND TRACKING SYSTEM. இது வீரர்களின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு எலக்ட்ரானிக் கருவி. இதன்மூலம் வீரர் எவ்வளவு தூரம் ஓடி இருக்கிறார், கோல் கம்பத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.. வீரர் களைப்படைந்துவிட்டாரா என்பதை தெரிந்துகொண்டு மாற்று வீரரைக் களமிறக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருந்தது.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...