முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம்; சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘Bhar os’ ன் சிறப்பு அம்சங்கள் இது தான்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம்; சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘Bhar os’ ன் சிறப்பு அம்சங்கள் இது தான்!

‘Bhar os’சிறப்பு அம்சங்கள்

‘Bhar os’சிறப்பு அம்சங்கள்

Bhar os : சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘Bhar os’ இன் சிறப்பு அம்சங்கள் மற்றும் அதனை போனில் பதிவிறக்கம் செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு Android மற்றும் ios ஆகிய ஸ்மார்ட்போன் os களுக்குப் போட்டியாக முற்றிலும் இந்தியாவில் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி  உருவாக்கப்பட்ட ஒரு os தான் ‘Bhar OS’. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே ஆத்ம நிர்பார் மொபைல் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள். இந்த இயங்குதளத்தின் மூலம் தேவையான ஆப் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்றும் பயனர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம், அதிகாரம், பயண அனுபவம் என அனைத்து வசதிகளும் இந்த இயங்குதளத்தில் உள்ளது.

Bhar OS ன் முக்கிய அம்சங்கள்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மொபைல் இயங்குதளம் தேவையில்லாத, பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு ஆப்பையும் இதில் Install முடியாது. அதே சமயம் Bhar OS தானாகவே அப்டேட் ஆகிக்கொள்ளும். இதோடு மட்டுமின்றி OTA மூலம் ஏதாவது அப்டேட் கிடைத்தால் தானாகவே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் ஆகிவிடும். மேலும் இதில் PASS – Private App store Service மூலம் பாதுகாப்பான ஆப்கள் மட்டுமே இடம் பெறும். பயனர்களுக்கு ஆபத்தான எந்தவொரு புதிய ஆப்களும் இதில் இருக்க வாய்ப்பில்லை.

உங்கள் மொபைலில் BarOS ஐ எவ்வாறு நிறுவுவது?

தற்போதைய நிலவரப்படி, பரோஸ் என்ற இயங்குதளத்தை எப்போது பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது பற்றிய எவ்வித தகவலும் இல்லை. Windows OS போல் இல்லாமல், எல்லா ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் ஒரே ஒரு பில்ட் பரோஸ் நிறுவப்பட முடியாது. மேலும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலுக்கும் OS ஐ சீராக இயங்கவும், அதற்குப் பின்னால் உள்ள குழு மேம்படுத்த வேண்டும்.

எனவே அறிமுகத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோன்களுக்கு மட்டுமே Bhar OS கிடைக்கும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. BharOS-க்கான ஆப்-ஸ்டோர் போன்ற சேவையின் தேவையைப் பற்றி தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினர் இதுக்குறித்து பேசுகையில், மொபைல் போன் பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதில்லை என்பது தான் இதன் அம்சமாக உள்ளது.

Also Read : இவ்வளவு ரேட் கம்மியா? ஸ்மார்ட் வாட்ச் விலையை அதிரடியாக குறைத்த ஒன்பிளஸ்!

இதோடு நம்பிக்கையுடன் அதிக சுதந்திரம், கட்டுப்பாடு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளிப்பதுடன், பயனர்கள் தங்களுக்குத் தேவை என கருதும் செயலியை மட்டுமே பயன்படுத்தும் அம்சம் உள்ளது. மற்ற மொபைல் இயங்குதளங்கள் போன்று எவ்வித கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் சுலபமாக நீங்கள் இதை கையாளமுடியும் என்கின்றனர் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள்.

First published:

Tags: IIT Madras, Smartphone