ஜனவரி 26ம் தேதி ரிலீசாகும் FAU-G கேம் - இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்பதிவு!

ஜனவரி 26ம் தேதி ரிலீசாகும் FAU-G கேம் - இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்பதிவு!

FAU-G

சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் FAU-G க்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்படாத நிலையிலும், நான்கு மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளது ஆச்சரியமாக இருப்பதாக கோண்டல்  கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
Indian shooting game Fearless And United Guards அல்லது FAU-G, என்று அழைக்கப்படும் கேமானது ஜனவரி 26 அன்று ரிலீஸ் ஆகிறது. ஆனால் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே இந்த கேமிற்காக நான்கு மில்லியனிற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். 

பப்ஜி மொபைல் கேம்மிற்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை விதித்த நிலையில், பல கேமர்கள் பப்ஜிக்கு இணையான கேம்களை தேட தொடங்கினர். அந்த நேரத்தில் FAU-G கேம் குறித்த தகவலை nCore கேம்ஸ் பிராண்ட் தூதரும், பாலிவுட் நட்சத்திரமுமான அக்‌ஷய் குமார் அறிவித்தார். சீன ஆப்ஸ்கள் மற்றும் PUBG மொபைல் உள்ளிட்ட கேம்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்த விளையாட்டு குறித்த அறிவிப்பு வெளியானதால் பப்ஜி  கேமிற்கு மாற்றாக இந்த கேம் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக ஏராளமானோர் நம்பினர். 

இதன் விளைவாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில், வெறும் 24 மணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் FAU-G கேமிற்கு ஒரு மில்லியன் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த கேம் nCore கேம்ஸ்களால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கடந்த வாரம் ஐ.ஜி.என் செய்திக்கு பேட்டியளித்த FAU-G கேம் நிறுவனர் விஷால் கோண்டல், ஜனவரி 14ம் தேதி நிலவரப்படி நான்கு மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

Also read... Telegram செயலிக்கு ஆபத்து - பதறியடித்துக்கொண்டு அறிக்கைவிட்ட CEO துரோவ்!

சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் FAU-G க்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்படாத நிலையிலும், நான்கு மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளது ஆச்சரியமாக இருப்பதாக கோண்டல்  கூறியுள்ளார். மேலும், ஜனவரி 26ம் தேதி ஆப்-பை ரிலீஸ் செய்யும்போது இந்த கேமிற்காக குறைந்தது 5 மில்லியன் பேர் முன்பதிவு செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.ஜி.என் அறிக்கை, வெளியிட்டுள்ள தகவலின்படி தற்போது கேமிற்கு முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாத சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் வேறு எந்த கேமிற்காகவும் நான்கு மில்லியன் முன்பதிவுகள் இருந்ததில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: