ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆன்லைன் சூதாட்ட கேமிற்கு பெரும்பலான மக்கள் எதிர்ப்பு - கருத்துகணிப்பில் வெளியான தகவல்

ஆன்லைன் சூதாட்ட கேமிற்கு பெரும்பலான மக்கள் எதிர்ப்பு - கருத்துகணிப்பில் வெளியான தகவல்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

Fantasy Gaming | கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 91 சதவீத மக்கள் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும் ஆன்லைன் விளையாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் கேமிற்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகள் சமீப காலத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இளம் வயதினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரை அனைவரும் இதனை விரும்பி விளையாட துவங்கியுள்ளனர். ஃபேண்டஸி கேமிங் என்று வகைபடுத்தபடும் பல விளையாட்டுக்கள் சூதாட்டம் போல இருப்பதால் அதில் பண இழப்பிற்கான அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் அதிக அளவு பணத்தை இழந்ததினால் சில தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

இதைப் பற்றிய வழக்கு 2017 ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. அதில் பஞ்சாப் உயர் நீதிமன்றம் அளித்த ”பேண்டஸி விளையாட்டுக்கள் திறனின் அடிப்படையிளான விளையாட்டுக்கள் ஆகும்” என்ற தீர்ப்ப்பையே உச்ச நீதிமன்றமும் எதிரொலித்தது. ஆனாலும் பொதுமக்கள் பலரின் பார்வை இன்னும் இவை சூதாட்டம் என்ற கோணத்திலேயே உள்ளது.

இந்தியா முழுவதும் 322 மாவட்டங்களில் உள்ள 33,000 மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 65 சதவீதம் பேர் இவை கண்டிப்பாக சூதாட்டம் தான் எனவும் இவற்றை விளையாடுவதால் பல ஆபத்துக்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவே பெரும்பாலான மக்களின் கருத்து உள்ளதாக தெளிவுபடுத்துகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அக்டோபர் 1-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் தமிழகத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் சூதாட்டங்கள் ஆகியவற்றிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தமிழக அரசால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியாகும். ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான தடை சட்டம் இயற்றப்பட்ட போது 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த விளையாட்டுகளை திறன் அடிப்படையில் ஆன விளையாட்டுகளாக கொள்ள வேண்டும் என்றும் இவற்றை தடை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்துவதை தடை செய்தது.

Also Read : Password, Bigbasket - இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் பட்டியல்

கடந்த வாரம் ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் (All india gaming federation) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கை பதிவு செய்தது. அதில் போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை பெட்டிங் மற்றும் சூதாட்டத்தின் கீழ் வராது எனவும், அவற்றை விளையாடுவதற்கு தனித்திறமை தேவைப்படுவதால் இவற்றை திறன் அடிப்படையில் அமைந்த விளையாட்டுகளாக கருத வேண்டும் என்றும் தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

மேலும் சில மாநிலங்களில் முந்தைய காலங்களில் இருந்த லாட்டரி சீட்டுகளோடு இந்த ஆன்லைன் விளையாட்டுகளை ஒப்பிட்டு மக்கள் பேசிகின்றனர். இந்த லாட்டரி சீட்டு விளையாட்டிலும் மக்கள் அதிக அளவு பணத்தை இழந்தனர் குறிப்பிடத்தக்கது. பல்வேறு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிலர் மட்டுமே லாட்டரியை திறன் அடிப்படையில் அமைந்த விளையாட்டு என்று கூறி இதற்கு ஆதரவளித்தனர்.

Also Read : வெளியில் தெரியாத இதநோய்களையும் கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச்- புதிய ஆய்வு.!

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 91 சதவீத மக்கள் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும் ஆன்லைன் விளையாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முக்கியமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்காக மக்களுக்கு அடிக்கடி அனுப்பப்படும் குறுஞ்செய்திகளால் 92% மக்கள் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ட்ராய் மிக விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Game, India, Supreme court, Tamil News