இ-காமர்ஸ் பிளாட்ஃபாரம்களில் பொருட்களை வாங்கும் பெரும்பாலான யூஸர்கள் அந்த பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது என்று முன்பு அதை வாங்கிய யூஸர்களின் ஸ்டார் ரேட்டிங்கை வைத்து வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் & ரேட்டிங்ஸ்களை தடுக்க நுகர்வோர் விவகாரத் துறை புதிய விதிகளை அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட பிராண்டின் பொருட்களுக்கு நற்பெயரை உருவாக்கும் முயற்சியில் அல்லது போட்டி நிறுவனங்களின் வணிகத்தை பாதிக்க வைக்கும் முயற்ச்சியில் போலி ரிவ்யூஸ்கள் எழுதப்படுகின்றன. இவை பொதுவாக குறிப்பிட்ட உள்நோக்கத்தோடு வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களால் பதிவிடப்படுகின்றன.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் பதிவிடப்படும் போலி ரிவ்யூஸ்களை தடுக்கும் வகையில், ஆன்லைன் கன்ஸ்யூமர் ரிவ்யூஸ் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் கடந்த வாரம் (நவம்பர் 25) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிகள் டூர் & ட்ராவல் சர்விஸ், ரெஸ்டாரன்ட்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்களை யூஸர்களுக்கு வழங்கும் வெப்சைட்ஸ்களுக்கு பொருந்தும்.
சில நேரங்களில் பணம் வாங்கி கொண்டு செய்யப்படும் போலி ரிவ்யூக்கள் குறிப்பிட்ட தயாரிப்பு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை யூஸர்களிடையே ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துகின்றன. பொருட்களின் தரத்திற்கும் கொடுக்கப்படும் போலி ரிவ்யூஸ்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கும். இது ஆசையுடன் பொருட்களை வாங்கும் யூஸர்களுக்கு பொருள் கையில் கிடைத்தவுடன் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. போலி ரிவ்யூஸ் & ரேட்டிங்ஸை தடுக்க உதவும் புதிய விதிகள் நுகர்வோர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Read More : வீடியோ கேம் விளையாடுனாலே காசு.! இந்திய பெண்கள் குறி வைக்கும் புது பிசினஸ்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amazon, E-commerce, Flipkart, Online