2020-ல் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி ‘லிப்ரா’!

சர்வதேச அளவில் சமூக வலைதள தொடர்புகளையும் தாண்டி பணப்பரிமாற்றம், ஆன்லைன் வர்த்தகம் என கால்பதிக்கத் தயாராகி வருகிறது ஃபேஸ்புக்.

Web Desk | news18
Updated: June 18, 2019, 5:57 PM IST
2020-ல் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி ‘லிப்ரா’!
ஃபேஸ்புக்
Web Desk | news18
Updated: June 18, 2019, 5:57 PM IST
ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் முனைப்போடு புதிய க்ரிப்டோகரன்ஸி ஒன்றை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒரு டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ‘லிப்ரா’ என்னும் க்ரிப்டோகரன்ஸியை 2020-ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது ஃபேஸ்புக். லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியைப் பயன்படுத்த ‘கலிப்ரா’ என்னும் வாலட் ஒன்றையும் ஃபேஸ்புக் வெளியிட உள்ளது.

‘கலிப்ரா’ ஃபேஸ்புக்கின் மெசேஞ்சர், வாட்ஸ்அப் ஆகிய தளங்களுடனும் இணைக்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் சமூக வலைதள தொடர்புகளையும் தாண்டி பணப்பரிமாற்றம், ஆன்லைன் வர்த்தகம் என கால்பதிக்கத் தயாராகி வருகிறது ஃபேஸ்புக். ‘லிப்ரா’ திட்டத்தை பேபால்(paypal) நிறுவனத்தின் முன்னாள் தலைவரே உருவாக்கி வழிநடத்துகிறார்.


லிப்ரா என்றால் நீதி என்று அர்த்தமாம். பிரெஞ்சு மொழியில் இதற்கு ‘சுதந்திரம்’ என்று ஒரு அர்த்தமும் உள்ளது என்கிறார் லிப்ரா திட்ட வல்லுநர் டேவிட் மார்கஸ்.

மேலும் பார்க்க: ஃப்ளிப்கார்ட் மொபைல் சேல்... Zenfone முதல் iPhone வரையில் சூப்பர் தள்ளுபடி!
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...