ஒப்புதல் கிடைக்கும் வரையில் ’லிப்ரா’ கரன்ஸியை வெளியிடப்போவதில்லை - ஃபேஸ்புக்

கடந்த மாதம் ‘லிப்ரா’ குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஃபேஸ்புக் நிறுவனம் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

Web Desk | news18
Updated: July 16, 2019, 12:06 PM IST
ஒப்புதல் கிடைக்கும் வரையில் ’லிப்ரா’ கரன்ஸியை வெளியிடப்போவதில்லை - ஃபேஸ்புக்
லிப்ரா கரன்ஸி.(Reuters)
Web Desk | news18
Updated: July 16, 2019, 12:06 PM IST
ஒழுங்கு நடைமுறைகளைக் கடந்து ஒப்புதல் கிடைக்கும் வரையில் ‘லிப்ரா’ க்ரிப்டோகரன்ஸியை வெளியிடப்போவதில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிப்ரா என்னும் க்ரிப்டோகரன்ஸி அறிமுகப்படுத்தப்பட்டால் சர்வதேச அளவில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் அதிகாரிகளில் ஒருவரான டேவிஸ் மார்கஸ் கூறுகையில், “புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்களுக்குப் போட்டியானது அல்ல லிப்ரா. எந்த பணவியல் கொள்கை உடனும் லிப்ரா தலையிடாது. ஃபேஸ்புக் டிஜிட்டல் கரன்ஸியான லிப்ரா, அனைத்து நடைமுறைகளையும் நிறைவேற்றி முறையான ஒப்புதல் கிடைக்கும் வரையில் வெளியிடப்படாது” என்றார்.

லிப்ரா குறித்து அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்டீவன் நுச்சின் கூறுகையில், “பணமோசடி உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் லிப்ரா மூலம் நடக்காது எனப் பாதுகாத்துக் கொண்டே இருக்க முடியாது. அமெரிக்க நிதித்துறையின் ஒப்புதல் கிடைக்க ஃபேஸ்புக் உயர்தர உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்றார்.


கடந்த மாதம் ‘லிப்ரா’ குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ஃபேஸ்புக் நிறுவனம் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. டேட்டா பாதுகாப்பு, பண மோசடி, நுகர்வோர் பாதுகாப்பு எனப் பலவித அம்சங்கள் கேள்விக்குறியாகும் என லிப்ரா வருகையை சில நாடுகள் எதிர்க்கின்றன.

மேலும் பார்க்க: அமேசான் ப்ரைம் வழங்கும் யூத் ஆஃபர்... 18-24 வயதுடையோருக்கு அசத்தல் கேஷ்பேக்..!
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...