• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Facebook, WhatsApp, Instagram கணக்குளை நீக்கினால் எல்லா தரவையும் டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா?

Facebook, WhatsApp, Instagram கணக்குளை நீக்கினால் எல்லா தரவையும் டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா?

Facebook, whatsapp, Instagram

Facebook, whatsapp, Instagram

உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், சாட்கள் மற்றும் பிற கணக்குத் தரவுகள் அனைத்தும் சோசியல் மீடியா தளங்களில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும். எனவே பின்வரும் ஸ்டெப்களை நன்றாக கவனித்து அதன்படி செயல்படவேண்டும்.

  • Share this:
வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிரந்தரமாக டெலிட் செய்வதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். மேற்கண்ட ஆஃப்ஸ்களிலிருந்து அக்கவுண்ட்டை நீக்குவதற்கு முதலில் உங்கள் எல்லா தரவையும் அவற்றிலிருந்து டவுன்லோடு செய்யவேண்டும். உங்கள் தரவை எவ்வாறு டவுன்லோடு செய்யலாம். எவ்வளவு நேரம் எடுக்கும், எந்தத் தரவை உங்களால் பெறமுடியும் என்பது உட்பட எல்லாவற்றையும் நாங்கள் இங்கே உங்களுக்காக விரிவாக விளக்கியுள்ளோம். உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், சாட்கள் மற்றும் பிற கணக்குத் தரவுகள் அனைத்தும் சோசியல் மீடியா தளங்களில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும். எனவே பின்வரும் ஸ்டெப்களை நன்றாக கவனித்து அதன்படி செயல்படவேண்டும்.

வாட்ஸ்அப் தரவை எவ்வாறு டவுன்லோடு செய்வது:

உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு முன், உங்கள் எல்லா சாட்களையும் 'பேக்கப்' எடுக்க விரும்பினால், உங்கள் எல்லா தரவையும் டவுன்லோடு செய்யலாம். அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

ஸ்டெப் 1: உங்கள் தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யலாம், இதற்காக நீங்கள் அமைப்புகள்> சாட்கள்> சாட் ஹிஸ்டரி> எக்ஸ்போர்ட் சாட்டைப் பார்வையிட வேண்டும்.

ஸ்டெப் 2: நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் சாட்டைத் தேர்வுசெய்யவும்.

ஸ்டெப் 3: நீங்கள் தனிப்பட்டவர்களுடன் பரிமாறிக்கொண்ட அனைத்து கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஊடகங்களையும் சேர்க்க விரும்பினால் “மீடியா சேர்” என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: நீங்கள் சாட்டை எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் ஆப்ஸை தேர்வுசெய்யவும். வாட்ஸ்அப் ஆனது கூகிள் டிரைவ் மற்றும் ஜிமெயில் போன்ற ஆப்ஸ்களைக் காட்டும்.

வாட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி:

ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பைத் திறந்து மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: அமைப்புகள்> கணக்கு பிரிவு> எனது கணக்கை நீக்கு என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு எனது கணக்கை நீக்கு என்பதைத் தட்ட வேண்டும். உங்கள் கணக்கை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் உங்களை கேட்கும்.

ஸ்டெப் 4: முடிந்ததும், நீங்கள் செய்ய வேண்டியது 'எனது கணக்கை நீக்கு' என்பதைத் தட்டவும்.

பேஸ்புக் தரவை டவுன்லோடு செய்வது எப்படி:

பேஸ்புக் கணக்கை நீக்குவதற்கு முன்பு உங்கள் அனைத்து பேஸ்புக் தரவையும் டவுன்லோடு செய்யலாம். தரவுக்காக நீங்கள் பேஸ்புக்கிற்கு ஒரு கோரிக்கையை அனுப்பினால், அது உங்களுக்கு ஒரு இணைப்பை மின்னஞ்சல் செய்யும். பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் அடங்கும். பேஸ்புக்கில் நீங்கள் செய்த அனைத்து மெசேஜ்கள் அல்லது சாட் உரையாடல்களும் இதில் கிடைக்கும். அதோடு கூட பேஸ்புக் நிறுவனம் உங்கள் தொடர்பு தகவல், நிகழ்வுகள், காலவரிசை மற்றும் பிற விவரங்களையும் வழங்குகிறது.

ஸ்டெப் 1: உங்கள் பேஸ்புக் தரவை டவுன்லோடு செய்யும் லிங்க்கைப் பெற, அமைப்புகள் மற்றும் தனியுரிமை பிரிவுக்குச் செல்லுங்கள், இது ஹாம்பர்கர் மெனுவில் மறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் 2: இப்போது அமைப்புகளைத் தட்டவும்> ஸ்குரோல் டவுன் செய்து, “உங்கள் தகவலைப் பதிவிறக்கு” என்பதைத் தட்டவும். (You Facebook Information பிரிவில் இந்த விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.)

ஸ்டெப் 3: பேஸ்புக்கிலிருந்து நீங்கள் விரும்பும் அனைத்து தகவல்களையும் தேர்ந்தெடுக்கலாம், தேர்வு நீக்கலாம் இதை செய்த பின்னர் கோப்பை உருவாக்கு என்பதை தட்ட வேண்டும். இப்போது நிறுவனம் உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்வதற்கான லிங்க்கை அனுப்பும். டவுன்லோடின் நேரம் நீங்கள் எவ்வளவு தரவை உருவாக்கியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது. அதற்கு தோராயமாக 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, லிங்க்கானது மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.

பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி:

ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் பேஸ்புக் ஆப்ஸை திறந்து அமைப்புகள் & தனியுரிமை > அமைப்புகளுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: சர்ச் பாக்சில் Deactivate என்று டைப் செய்து சர்ச் பட்டனைத் தட்டவும்.

ஸ்டெப் 3: இப்போது நீங்கள் “கணக்கு உரிமை மற்றும் கட்டுப்பாடு” விருப்பத்தைப் பெறுவீர்கள், அதைத் தட்டவும்.

ஸ்டெப் 4: இப்போது Deactivate மற்றும் Delete என்பதைத் தட்டவும்> கணக்கை நிரந்தரமாக நீக்க 'கணக்கை நீக்கு' என்பதைத் தேர்வுசெய்யவும். தேர்வு செய்த பிறகு, “கணக்கு நீக்குதலுக்குத் தொடரவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

இன்ஸ்டாகிராம் தரவை டவுன்லோடு எப்படி:

பேஸ்புக்கைப் போலவே, உங்கள் எல்லா தரவையும் டவுன்லோடு செய்ய Instagram உங்களை அனுமதிக்கிறது. டவுன்லோடு இணைப்பை நீங்கள் கேட்டவுடன், இன்ஸ்டாகிராம் மேடையில் நீங்கள் ஷேர் செய்த அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளின் கோப்பை உருவாக்கி உங்களுக்கு லிங்க்கை மின்னஞ்சல் செய்கிறது. இந்த செயல்முறைக்கு 48 மணிநேரம் வரை ஆகலாம், எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது.

ஸ்டெப்1: உங்கள் மொபைலில் Instagramஐத் திறந்து, ஹாம்பர்கர் மெனுவை தட்டுவதன் மூலம் அமைப்புகளுக்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: பாதுகாப்பு> தரவைப் பதிவிறக்கு> உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும் என்பதை ஒவ்வொன்றாக கிளிக் செய்யவும்.

ஸ்டேப் 3: Request Downloadஐ தட்டவும். உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு Instagram கேட்கும்.

இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது எப்படி:

ஸ்டெப் 1: இன்ஸ்டாகிராமின் மொபைல் பதிப்பில் எனது கணக்கை நீக்கு விருப்பத்தை உங்களால காண முடியாது. Delete account page என்பதற்கு இன்ஸ்டாகிராமின் வலைதளத்திற்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: வலைதளத்தில் நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்நுழையவில்லை என்றால், முதலில் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.

ஸ்டெப் 3: ‘உங்கள் கணக்கை ஏன் நீக்குகிறீர்கள்?’ என்பதற்கு அடுத்த கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும். உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான விருப்பம் நீங்கள் மெனுவிலிருந்து ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்த பின்னரே தோன்றும்.

ஸ்டெப் 4: இப்போது 'எனது கணக்கை நிரந்தரமாக நீக்கு' என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். அவ்வளவுதான் செயல் முடிந்துவிடும்.

சோசியல் மீடியாக்களில் உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று எந்த ஒரு நிச்சயத்தையும் யாராலும் தர முடியாது. சோசியல் மீடியா நிறுவனங்கள், எங்கள் தயாரிப்புகள் உங்கள் தகவலைப் பாதுகாக்கும். உங்கள் தரவைப் யாரிடமும் அளிக்காது என்று கூறினாலும் அது உண்மையில்லை. கூடுமானவரை உங்களுடைய தனிப்பட்ட புகைப்படம், வீடியோ அல்லது தகவல்களை சமூக வலை தளங்களில் அப்லோட் செய்யாமல் இருப்பது முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: